»   »  "அஜித் படத்துல சின்ன ரோல்ல நடிச்சா பெரிய நடிகையா வரலாம்.." - இது புது சென்டிமென்ட்!

"அஜித் படத்துல சின்ன ரோல்ல நடிச்சா பெரிய நடிகையா வரலாம்.." - இது புது சென்டிமென்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'அருவி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அதிதி பாலன் அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்துள்ளார் என்பதை நம் தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

நடிகை ஜோதிகாவும் இதே போல அஜித் டபுள் ஆக்‌ஷனில் நடித்த 'வாலி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர்தான்.

அஜித் படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானால் முன்னணி நடிகையாக வந்துவிடலாம் எனும் சென்டிமென்ட் ஒன்று உருவாகி இருக்கிறது.

அருவி ஹீரோயின்

அருவி ஹீரோயின்

அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கிய 'அருவி' படம் கடந்த வருடத்தில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற படமாக அமைந்தது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

அதிதி பாலன்

அதிதி பாலன்

இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி பாலன் ஏற்கெனவே அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் சிறிய ரோலில் நடித்திருக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவுக்கு தோழியாக சில காட்சிகளில் நடித்துள்ளார் 'அருவி' ஹீரோயின் அதிதி பாலன்.

அஜித் படத்தில் அறிமுகமான ஜோதிகா

அஜித் படத்தில் அறிமுகமான ஜோதிகா

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன் ஆகியோர் நடித்த 'வாலி' படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் தான் மும்பையைச் சேர்ந்த நடிகை ஜோதிகா. நக்மாவின் தங்கையான ஜோதிகா 'வாலி' படத்தில் சிறிய ரோலில் அறிமுகமானார்.

கற்பனைக் காதலியாக ஜோதிகா

கற்பனைக் காதலியாக ஜோதிகா

'வாலி' படத்தில் சிம்ரனை காதலிக்கும் அஜித், சிம்பதியை உருவாக்குவதற்காக தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், காதல் தோல்வியடைந்ததாகவும் பொய் சொல்வார். அந்தக் கற்பனைக் காதலியாக நடித்தவர் தான் ஜோதிகா. 'வாலி' படத்தின் 'ஓ சோனா...' பாடலில் ஆடியிருப்பார் ஜோதிகா.

முன்னணி நாயகியாக உயர்ந்த ஜோதிகா

முன்னணி நாயகியாக உயர்ந்த ஜோதிகா

பிறகு சூர்யாவுடன் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நாயகியாக வளர்ந்தார் ஜோதிகா. அஜித் படத்தில் அறிமுகமான ஜோதிகா பின்னாளில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அஜித் படத்தில் அறிமுகமானால்

அஜித் படத்தில் அறிமுகமானால்

அருவி' ஹீரோயின் அதிதி பாலன் கதாநாயகியாக நடித்திருக்கும் முதல் படத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார். 'அஜித்தின் ;என்னை அறிந்தால்' படத்தில் சிறிய ரோலில் நடித்தவர் இவர். இதன்மூலம் அஜித் படத்தில் சிறிய ரோலில் நடித்தால் முன்னணி நடிகையாகலாம் எனும் சென்டிமென்ட் உருவாகி இருக்கிறது.

English summary
Tamil cinema fans have discovered that 'Aruvi' Aditi balan is acted in the film 'Yennai arindhal'. Actress Jyothika also acted in a small role in the film 'Vaali' starring Ajith. There is a sentiment that, Who plays small role in Ajith film, will be the lead actress in cine field.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X