»   »  மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... பாடாய்ப் படுத்திய சென்சார்!

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... பாடாய்ப் படுத்திய சென்சார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்துக்களைச் சொல்லும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்துக்கு சென்சார் சான்று தர பாடாய்ப் படுத்திவிட்டதாக அப்படத்தின் இயக்குநர் குற்றம்சாட்டியுள்ளார்.

எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக வி மதியழகன், ஆர் ரம்யா தயாரித்துள்ள படம் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன'.

இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் 'திலகர்' துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநீடு, மனோபாலா, அருள்தாஸ், 'மைம்'கோபி, 'சதுரங்க வேட்டை' புகழ் வளவன், 'நான் மகான் அல்ல' ராம்ஸ் மற்றும் நிறைய அறிமுகங்களும் நடிக்கின்றனர்.

தலைப்பு

தலைப்பு

படம் குறித்து இயக்குநர் ராகேஷ் கூறுகையில், "இந்த தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது.

படாதபாடு பட்டுட்டோம்

படாதபாடு பட்டுட்டோம்

பெண்களின் பாதுகாப்பை பற்றி வலியுறுத்த எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு சென்ஸார் வாங்குவதற்குள் நாங்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. இன்று படம் இயக்கவே என்ன பாடு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் இங்கு இதை எடுக்கலாம். இதை எடுக்கக்கூடாது என்ற முன் அறிவுறுத்தல் இல்லாத அல்லது இதை ஏற்றுக்கொள்வார்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எந்தவித வழிகாட்டுதலுமில்லாத ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையில்தான் படமெடுக்க வேண்டியுள்ளது.

கட் பண்ணா என்ன அர்த்தம்?

கட் பண்ணா என்ன அர்த்தம்?

காட்சிகள் அமைத்து அதை படமாக்கி காட்சிகளைக் கோர்த்து முழுமை பெற்ற ஒரு படமான பின் அதை இருக்கக் கூடாது என்கிறார்கள். அப்போ அந்த காட்சியை உருவாக்க செலவழித்த பணம் எல்லாம் வீண்தானே?

வழிகாட்டுதல்

வழிகாட்டுதல்

அப்படி எந்த விதிகளும் வரைமுறைகளும் இந்த சென்ஸாரில் தெளிவாக இல்லை. இந்த சினிமா எடுப்பவர்களுக்கு அந்த வழிகாட்டுதல் ஒரு புத்தகமாகவோ அல்லது வகுப்பாகவோ சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை.

அரசியல்

அரசியல்

அப்படியொரு திட்டவட்டமான விதிமுறைகள் ஏன் இல்லை என்பது என் கேள்வி? ஆளுங்கட்சியின்போது படம் எடுத்தால் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி வரும் கமெண்டுகள் அல்லது அவரைப் பற்றிய தவறான காட்சிகள் அனுமதிக்கப்படும். ஆளுங்கட்சியில் உள்ளவர் பற்றி அதே வார்த்தையில் அதே வார்த்தையால் காட்சிப்படுத்தப்பட்டால் அந்தக்காட்சி வெட்டப்படும். இதுதான் சென்ஸார்.

யுஏ சான்று

யுஏ சான்று

இந்தப் படத்தின் துவக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில ரத்தக் காட்சிகளுக்காக, சில இடங்களில் கட் கொடுக்கப்பட்டது. அப்படியும் சென்ஸார் கிடைக்கவில்லை. ரிவைசிங் கமிட்டிக்கு சென்று படாதபாடு பட்டபின்னரே யுஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இத்தனைக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம். அவர்களுக்கு நேரும் சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறது இந்தப்படம். அப்படிப்பட்ட படத்தையே பாடாய்ப்படுத்தித்தான் சென்சார் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

கொடூர சென்சார்

கொடூர சென்சார்

சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் பேச்சுவழக்கில் இருக்கும் ஒரு வார்த்தையை அனுமதித்த சென்சார், அதே வார்த்தையை இந்தப்படத்தில் அனுமதிக்க மறுத்துள்ளது. அதேபோல ரத்தக்காட்சிகளுடன் சில படங்களுக்கு ‘யு' சான்றிதழ் கொடுத்திருக்கும் அதே சென்சார் தான், இந்தப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது என்பதை என்னவென்று சொல்வது..? படம் எடுப்பதைவிடக் கொடூரம் இந்த சென்ஸாரில் சான்றிதழ் வாங்குவதுதான். சான்றிதழ் வாங்குவதற்கு மட்டுமே ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

நிறைவு

நிறைவு


என்ன பாடாய்ப்படுத்தினாலும் இறுதியில் சமூகத்திற்குத் தேவையான ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறோம் என்பதுதான் நிறைவு," என்றார்.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவை பிஜி முத்தையா கையாள, கோலிசோடா 2 படத்தின் இசையமைப்பாளர் அச்சு இசையமைத்துள்ளார், எடிட்டிங்கை ஷான் லோகேஷும், பாடல் வரிகளை பா.விஜய்யும், மீனாட்சி சுந்தமும் எழுதியுள்ளனர்.

English summary
Debutant director Rakesh has blasted regional censor board for its senseless regulations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X