»   »  கடலில் விழுந்து சாகணுமா?: செய்தியாளர் சந்திப்பில் அழுத இயக்குனர்

கடலில் விழுந்து சாகணுமா?: செய்தியாளர் சந்திப்பில் அழுத இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுமுகங்களை வைத்து படம் இயக்கினால் கடலில் விழுந்து சாக வேண்டுமா என்று கேட்டு கண் கலங்கினார் இயக்குனர் எஸ்.பி.டி.ஏ. குமார்.

அர்ஜுனா, வினு கிருத்திக், நிரஞ்சன், சுமன், சுரேஷ், பாண்டியன், யாமினி பாஸ்கர் உள்ளிட்டோரை வைத்து புதுமுகம் எஸ்.பி.டி.ஏ. குமார் இயக்கியுள்ள படம் முன்னோடி. படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அப்பொழுது இயக்குனார் குமார் கூறும்போது,

சினிமா

சினிமா

நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவன். என் அப்பா படம் பார்த்தது இல்லை. எனக்கு படம் பார்க்க அனுமதியும் அளிக்கவில்லை. அப்படி இருந்தும் எனக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது.

போராட்டம்

போராட்டம்

சினிமா படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 18 ஆண்டு போராட்டத்திற்கு பிறகே படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் சம்பாதித்த காசில் படம் எடுத்துள்ளேன்.

முன்னோடி

முன்னோடி

முன்னோடி படத்திற்காக இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டுள்ளேன். நான் கஷ்டப்படக் கூடாது என்று என் குடும்பத்தார் நினைத்தனர். நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் என்னோடு சேர்ந்து பொறுத்துக் கொண்டனர்.

கிண்டல்

கிண்டல்

நான் கஷ்டப்பட்டு எடுத்துள்ள படத்தை தியேட்டரில் பார்க்க குறைந்தது 10 பேராவது வருவார்களா என்று கிண்டல் செய்கிறார்கள். படம் நல்லாவே இருந்தாலும் யாரும் பார்க்க மாட்டார்கள் என்கிறார்கள். ஏன் புதுமுகங்களை வைத்து படம் இயக்கினால் கடலில் விழுந்து சாகணுமா என்று கேட்ட குமார் கண் கலங்கிவிட்டார்.

English summary
Debutant director Kumar has got emotional during the press meet of his movie Munnodi in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil