»   »  சசிகுமாருக்கு கதை சொல்ல ஒரு வருடம் காத்திருந்த புது இயக்குநர்!

சசிகுமாருக்கு கதை சொல்ல ஒரு வருடம் காத்திருந்த புது இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைக்கு முன்னணி நடிகர்கள் மட்டுமல்ல, அதற்கு அடுத்த நிலையில் உள்ள நடிகர்-நடிகைகளுக்கு கதை சொல்லக் கூட மாதக் கணக்கில் அலைய வேண்டும். சில ஹீரோக்களின் கால்ஷீட் பெற அவர்களுடன் ஆண்டுக்கணக்கில் அலைந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதற்கு காரணம் என்று தேடிப் போனால்.. அது ஒரு பெரிய அலுப்புக் கதையாகிவிடும்.


Debutant director waiting one year for Sasikumar

விஷயத்துக்கு வருவோம்... இயக்குநர் - நடிகர் சசிகுமாருக்காகவே ஒரு கதையை எழுதி வைத்துவிட்டு ஒரு ஆண்டுகள், அந்தக் கதையை அவரிடம் சொல்ல முடியாமல் காத்திருந்திருக்கிறார் ஒரு இயக்குநர். அவர் வசந்தமணி. டிபி கஜேந்திரனிடம் துணை இயக்குநர், ஜில்லாவில் நேசனுடன் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.


சசிகுமாரை வைத்து இப்போது வெற்றிவேல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.


Debutant director waiting one year for Sasikumar

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ், ஆர். ரவிந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 500-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்தவர் ரவீந்திரன். தயாரிப்பாளராக அவருக்கும் இது முதல் படம்.


இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகள்.


Debutant director waiting one year for Sasikumar

இயக்குநர் வசந்தமணியிடம் பேசினோம்.


"காதலையும் குடும்பத்தையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்தும் உண்டு.


Debutant director waiting one year for Sasikumar

இந்தப் படத்தின் கதையை சசிகுமாரை மனதில் வைத்துதான் எழுதினேன். ஆனால் அவரிடம் நேரில் சொல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை. யார் யார் மூலமோ சொல்லியும் அவர்கள் சசிகுமாரிடம் விஷயத்தைச் சொல்லவே இல்லை. ஒரு ஆண்டு கழித்து யதேச்சையாக அவரைச் சந்தித்து சொன்னேன். நல்ல கதை. ஏன் இத்தனை நாள் காத்திருந்தீர்கள்? உடனே ஆரம்பிக்கலாமே என்றார்.


தாரை தப்பட்டை முடிந்த கையோடு இந்தப் படத்தை ஆரம்பித்தோம். 70 நாட்களில் முடித்துவிட்டோம்.


Debutant director waiting one year for Sasikumar

சசிகுமார் மிக அருமையான மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து இயக்கியதற்காக இதைச் சொல்லவில்லை. தான் ஒரு இயக்குநர் என்றாலும் என் சுதந்திரம் இம்மி அளவுக்கும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்," என்றார்.

English summary
Vasanthamani, the director of Sasikumar starrer Vetrivel shared his experience with the actor in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil