»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் சினிமாத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் வியாழக்கிழமை நல்ல முடிவு ஏற்படும் என்று பட அதிபர்கள்-நடிகர்கள் கூறினார்கள்.

பட அதிபர்கள், நடிகர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக திரை உலகில் கடந்த 46 நாட்களாக வேலை நிறுத்தம் தொடர்ந்து நடந்துவருகிறது.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செவ்வாய்க்கிழமை நடிக, நடிகர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஏற்பட்ட முடிவுகள் குறித்து நடிக, நடிகர்கள்,பட அதிபர்களை சந்தித்துத் தெரிவித்தனர்.

அதோடு இப்பிரச்சனை பற்றி பேசி முடிவு எடுக்க நடிகர் சரத்குமார் தலைமையில் 11 நடிகர்கள் கொண்ட குழுவை விஜயகாந்த் நியமித்தார்.

இந்த நடிகர்கள் குழு, தமிழ்ப்பட அதிபர்களை சந்தித்துப் பேசினார்கள். இரண்டு மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் வெளியே வந்தபாரதிராஜா எல்லாம் சுமூகமாக முடிந்தது என்றார்.

நடிகர் சரத்குமார் கூறுகையில், சினிமா பிரச்சனை முடிவை நெருங்கி விட்டது. தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. அது நல்லபடியாகமுடிந்ததும் முடிவு குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.

முன்னதாகக் கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன், தியாகு, நாசர் மற்றும் பலரும், டைரக்டர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி,பாக்யராஜ், பட அதிபர்கள் சித்ரா லட்சுமணன், முரளீதரன், சுவாமிநாதன், ஹென்றி, மது, சங்கிலி முருகன், வெடிமுத்து, கண்ணப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Read more about: actor chennai cinema problem tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil