ஷங்கர் பிறந்தநாள்.. கஞ்சா விற்க சென்றது முதல் விஜய் அப்பாவிடம் அறை வாங்கியதுவரை.. எவ்வளவு கஷ்டங்கள் யப்பா!

சென்னை: ஷங்கர் இப்போது ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அதனால் அவரை பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியவர்களில் ஷங்கருக்கு அதிக பங்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. இந்நிலையில் அவர் இன்று தனது 63ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டிலும் பிரமாண்டமாக படம் எடுக்க முடியும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மெர்சல் செய்யலாம் என்பதை முதன்முதலில் நடைமுறைப்படுத்தி காண்பித்தவர் ஷங்கர். எஸ்.ஏ.சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றிவிட்டு இயக்குநராக அவதாரம் எடுத்தவர் ஷங்கர். அவர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படம் ஹிட்டானாலும் சில விமர்சனங்களை சந்தித்தது என்பதுதான் உண்மை.

அடுத்ததடுத்த சம்பவம்: ஜென்டில்மேன் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானரில் இருந்தன. காதலன், ஜீன்ஸ், இந்தியன் என வரிசையாக ஹிட்டுகள் கொடுத்தார். ஜீன்ஸ் படத்தில் எல்லாம் கிராஃபிக்ஸ் காட்சிகளை இப்படியும் பயன்படுத்தலாம் என்று இந்திய திரைத்துறைக்கே பாடம் எடுத்தார். அதுமட்டுமின்றி முதன்முறையாக ஏழு அதிசயங்களை ஆடியன்ஸின் கண்களுக்கு விருந்தாக்கினார்.

முதல் பிரமாண்டம்: இப்போதைய தலைமுறையினரிடம் சென்று பிரமாண்ட இயக்குநர் யார் என்று கேட்டால் அனைவருமே ராஜமௌலி என்று சொல்வார்கள். ஆனால் ஓஜி மற்றும் முதல் பிரமாண்ட டைரக்டர் என்றால் அவர் ஷங்கர்தான். 90களில் தொழில்நுட்பத்தில் அவர் செலுத்திய பாய்ச்சல் சாதாரணமில்லை. அப்போது இருக்கும் டெக்னாலஜியை வைத்தே ரோபோ படத்தையும் எடுக்க திட்டமிட்டிருந்தார். அதை மட்டும் அவர் அப்போது எடுத்திருந்தால் கண்டிப்பாக தரமான செய்கையாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர் அப்படி இருந்ததால் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள்வரை அவர் இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார்கள்.

Deep analysis about Shankar as he celebrates his birthday today
Photo Credit:

பட்ட கஷ்டங்கள்: ஷங்கர் இன்று பல கோடிக்கு அதிபதி. பெரிய பெயர், புகழ் என அத்தனையும் இருக்கிறது. ஆனால் அவர் இந்த இடத்துக்கு வருவதற்கு ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். அடிப்படையில் பொறியாளரான ஷங்கர் அதுதொடர்பான வேலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதுதான் முதல் பிளான். ஆனால் அந்த வாய்ப்பு அமையவில்லை. பிறகு தொடர்ந்து கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தார். அதெல்லாம் சரிப்பட்டு வராமல் சொந்தமாக தொழில் ஒன்றையும் தொடங்கினார். அந்தத் தொழிலும் நொடிந்து போக மொத்தமாக முடங்கிவிடுவார் என்றுதான் அவரை சுற்றி இருந்தவர்கள் நினைத்தார்கள்.

கஞ்சா விற்க சென்ற ஷங்கர்: ஆனால் அடுத்தக்கட்டமாக ஒரு ஆபத்தான வழியை தேர்ந்தெடுத்தார். கஞ்சா விற்றால் பணம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று சிலர் பேச்சை கேட்டு; ஆந்திராவுக்கு சென்று கையில் இருந்த பணத்தை எல்லாம் தொலைத்தார். விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ஷங்கர் திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டுக்கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். நல்ல வழியும் மூடியது, கெட்ட வழியும் மூடியது என்ற நிலை அவரது வாழ்க்கையில் உருவானது.

திறந்த கதவு: ஒரு வழி மூடினால் இன்னொரு வழி திறக்கப்படும் என்ற நியதிக்கு ஏற்ப நாடக கம்பெனியில் சில்லறை வேலைக்கு சேர்ந்து; தன்னிடம் இருந்த மிமிக்ரி, காமெடி செய்யும் திறமைகளை வெளிப்படுத்தி மேடை ஏறிவிட்டார். அங்கு வைத்துதான் எஸ்.ஏ.சந்திரசேகர் ஷங்கரை பார்த்தார். ஷங்கரை பார்த்தார் என்பதைவிட அவரது திறமையை பார்த்து தன்னிடம் வேலைக்கு வருமாறு அழைத்ததை அடுத்து சந்தோஷமாக சேர்ந்தார்.

Take a Poll

வாங்கிய அறை: எஸ்.ஏ.சியை பொறுத்தவரை தன்னுடைய உதவி இயக்குநர்களுக்கு மாதா மாதம் சம்பளம் வழங்கக்கூடியவர். இது ஒருபக்கம் இருக்க உதவி இயக்குநராக இருப்பதை மறந்துவிட்டு நடிகராகும் வேட்கையில் இருந்த ஷங்கர் ஏதோ ஒரு தவறு செய்ய; அனைவருக்கும் முன்னிலையில் ஷங்கரை அறைந்தார் எஸ்.ஏ.சி. கொடுத்த அந்த அறையால்தான்; நாம் ஆக்டர் மெட்டீரியல் இல்லை இயக்குநர் மெட்டீரியல் என்பது ஷங்கருக்கு உரைத்தது. அதனையடுத்து முறையாக வேலை கற்றுக்கொண்டு; பவித்ரனிடமும் இணை இயக்குநராக பணியாற்றி ஜென்டில்மேன் படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.

மீண்டும் வருவார்: ஷங்கர் இப்போது ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அவர் கடைசியாக இயக்கிய மூன்று படங்களுமே படுதோல்விதான். அவருக்குள் இருக்கும் சரக்கு தீர்ந்துவிட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் அவர் நினைத்தால் விரைவிலேயே கம்பேக் கொடுத்துவிடுவார். ஏனெனில் இந்த திட்டுக்களும் பேச்சுக்களும் தோல்விகளும் அவருக்கு முதன்முறை இல்லை. விரைவில் அவர் கம்பேக் கொடுப்பார். பிரமாண்டத்தின் முதல் விதையை போட்ட ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X