பிரபாஸின் அதிரிபுதிரி சயின்ஸ் பிக்சன் படம்... அந்த பாலிவுட் ஹீரோயின் நடிக்கலையாமே?

By

சென்னை: பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பாலிவுட் ஹீரோயினை ஒப்பந்தம் செய்யவில்லை என்று படக்குழு மறுத்துள்ளது.

'பாகுபலி' மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர், தெலுங்கு ஹீரோ பிரபாஸ். இதை தொடர்ந்து மெகா பட்ஜெட் படமான 'சாஹோ'வில் நடித்தார்.

இதில் ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவானது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து இந்தப் படத்தை தயாரித்த யுவி கிரியேஷின் அடுத்த படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார். இதை கே கே ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

நாக் அஸ்வின்

நாக் அஸ்வின்

இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இதையடுத்து பிரபாஸ் நடக்கும் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார் என்பதுதான் அது. இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் படம் என்று கூறப்படுகிறது. மூன்றாம் உலகப் போர் என்ற விஷயத்தை மையமாக வைத்து படம் உருவாக இருக்கிறதாம்.

தமிழ், தெலுங்கு, இந்தி

தமிழ், தெலுங்கு, இந்தி

இதை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. தெலுங்கு சினிமாவின் பழமையான தயாரிப்பு நிறுவனம் இது. இந்தப் படமும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. இதனால், இந்தி நடிகை ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதுவரை தெலுங்கு சினிமாவில் நடிக்க ஒரு ஹீரோயினை தேடி வருவதாகவும் கூறப்பட்டது.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

இந்நிலையில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோன் நடிப்பதாகச் செய்திகள் வெளியாயின. அவர் இதுவரை தெலுங்கில் நடிக்கவில்லை என்பதால் அவரை நடிக்க வைக்கப் படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதை இயக்குனர் நாக் அஸ்வின் மறுத்துள்ளார். இன்னும் ஹீரோயின் யாரும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X