அட்லியின் ஆட்டம் ஆரம்பம்..ஜவான் படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகை!

சென்னை : அட்லியின் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளார்.

Recommended Video

முன்னனி இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்த Sivakarthikeyan| Atlee, Sivakarthikeyan Garden, Aarti Baby

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக இந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு கோவா, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதியாக மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில், நாயகி கதாபாத்திரம் நயன்தாரா நடித்து வருகிறார்.

ஜவான்

ஜவான்

நல்ல கதை மற்றும் நேர்த்தியான திரைக்கதை தான் வெற்றிக்கு முக்கியம் என நினைத்த ஷாருக்கான் இயக்குநர் அட்லியிடம் கதை கேட்டு அட்லியின் படத்திற்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

ஷாருக்கான் டபிள் ரோல்

ஷாருக்கான் டபிள் ரோல்

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரியாமணி, யோகிபாபு, உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதிக்கு என்ன ரோல்?

விஜய்சேதுபதிக்கு என்ன ரோல்?

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ள இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் ராணாவிடம் பேச்சுவார்த்த நடத்தப்பட்ட நிலையில் அவர் மறுத்துவிட்டதை அடுத்து, ஜவான்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இணைந்த பாலிவுட் நடிகை

இணைந்த பாலிவுட் நடிகை

இந்நிலையில், ஜவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்க உள்ளது. இதற்காக ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சென்னை வந்துள்ளார். அவரை அட்லி விமான நிலையத்தில் வரவேற்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் மற்றும் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X