»   »  ஓமைகாட்- புத்தாண்டிலா, நிஜமாகவா?: ரன்வீர், தீபிகாவை கேட்கும் பாலிவுட்

ஓமைகாட்- புத்தாண்டிலா, நிஜமாகவா?: ரன்வீர், தீபிகாவை கேட்கும் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் காதல் ஜோடியான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் புத்தாண்டில் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

நடிகர் ரன்பிர் கபூரை பிரிந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ராம் லீலா படத்தில் நடிக்கையில் ரன்வீருக்கும், தீபிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அந்த படமும் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர்கள் மீண்டும் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் நடித்தனர்.

பாஜிராவ் மஸ்தானி

பாஜிராவ் மஸ்தானி

பன்சாலி இயக்கத்தில் தீபிகா, ரன்வீர் சிங், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடித்த பாஜிராவ் மஸ்தானி படம் ஹிட்டாகியுள்ளது. படம் கோடி கோடியாய் வசூலித்துக் கொண்டிருக்கிறது.

காதல்

காதல்

தீபிகாவை காதலிப்பதாக ரன்வீர் சிங் தான் பல நிகழ்ச்சிகளில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கூறி வந்தார். ஆனால் ரன்வீரை தீபிகா திட்டியதால் காதல் பற்றி பேசுவதை அவர் நிறுத்திக் கொண்டார்.

ரன்வீர்

ரன்வீர்

தீபிகா ரன்வீர் சிங்கை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அவர் தான் தீபிகாவை தீவிரமாக காதலிப்பதாகவும் பாலிவுட்டில் பேசப்பட்டது. மேலும் தீபிகா ரன்வீரை கழற்றிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறப்பட்டது.

புத்தாண்டு

புத்தாண்டு

ரன்வீர், தீபிகா புத்தாண்டில் தங்களின் காதல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம். ஆனால் அவர்கள் அறிவிப்பு வெளியிடட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று வேறு பாலிவுட்டில் சிலர் கூறுகிறார்கள்.

English summary
Buzz is that Bollywood couple Ranveer and Deepika will confirm their relationship officially in 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil