பாத்ரூம், பெட்ரூம்: கணவரை பற்றி 'இதை' எல்லாமா பப்ளிக்கா சொல்வது தீபிகா?
Recommended Video

மும்பை: கணவர் ரன்வீர் சிங் பற்றிய ரகசியங்களை தெரிவித்துள்ளார் நடிகை தீபிகா படுகோனே.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங் திருமணத்திற்கு பிறகு எங்கு ஜோடியாக சென்றாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்கள்.
அவர்கள் ஜோடியாக விருது விழாவில் கலந்து கொண்டனர்.
உடை
தீபிகாவை முதன்முதலாக பார்த்தது குறித்து விழாவில் பேசினார் ரன்வீர் சிங். அவர் கூறியதாவது, எனக்கு அனைத்துமே நினைவில் உள்ளது. அவர் சல்வார் கமீஸ் அணிந்திருந்தார். தீபிகா நடந்து வந்தபோது காற்றடித்து அவர் தலைமுடி பறந்தது என்றார்.
தீபிகா
விருது விழா மேடையில் பேசிய தீபிகா தனது கணவர் ரன்வீர் பற்றிய ரகசியங்களை தெரிவித்தார். ரன்வீர் குளிக்க, பாத்ரூம் போக, ரெடியாக, படுக்கைக்கு வர ரொம்ப நேரம் எடுப்பார் என்றார் தீபிகா. தீபிகாவின் பேச்சை கேட்டவர்கள் சிரிக்கத் துவங்கிவிட்டனர். இதை பார்த்த அவர் படுக்கைக்கு வர லேட்டாகும் என்றேன் என்று திருத்தமாக கூறினார்.

அழகு
விருது விழாவுக்கு கருப்பு நிற கவுனில் அழகாக வந்திருந்தார் தீபிகா. ஆனால் ரன்வீர் சிங்கோ ஜிகுஜிகுவென கோட் சூட் அணிந்து வந்தார். இப்படி யாருமே எதிர்பார்க்காதது போன்று உடை அணிவது ரன்வீர் சிங்கின் வழக்கம்.

முடியவில்லை
கண்டமேனிக்கு உடை அணிய வேண்டாம் என்று தீபிகாவும் ரன்வீர் சிங்கிடம் பல முறை தெரிவித்துவிட்டாராம். அவர் கேட்காததால் இனி இந்த ஆள் திருந்த மாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் தீபிகா.


Click it and Unblock the Notifications











