»   »  ஹாலிவுட்டுக்கு போன வேகத்தில் திரும்பி வந்த தீபிகா, கொடி கெட்டிப் பறக்கும் பிரியங்கா

ஹாலிவுட்டுக்கு போன வேகத்தில் திரும்பி வந்த தீபிகா, கொடி கெட்டிப் பறக்கும் பிரியங்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் ஹாலிவுட் கனவு கனவாகவே ஆகிவிட்டது.

பாலிவுட்டில் கொடி கெட்டிப் பறக்கும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்றார். அவர் நடித்துள்ள ஹாலிவுட் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. மேலும் அவர் ஹாலிவுட் டிவி தொடரிலும் நடித்து வருகிறார்.

தீபிகா படுகோனேவும் ஹாலிவுட் சென்றார்.

தீபிகா

தீபிகா

தீபிகா படுகோனே வின் டீஸலுடன் சேர்ந்து நடித்த ஹாலிவுட் படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. இதனால் தீபிகாவுக்கு ஹாலிவுட்டில் மவுசு இல்லாமல் போய்விட்டது. பாலிவுட்டுக்கே திரும்பி வந்துவிட்டார்.

பிரியங்கா

பிரியங்கா

பிரியங்கா சோப்ராவின் படம் வெளியாகும் முன்பே அவர் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ஹாலிவுட் பத்திரிகைகளின் அட்டைப் படங்களில் அவரின் புகைப்படம் தான்.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட் என்றால் பிரியங்கா சோப்ரா தான் என ஹாலிவுட்காரர்கள் நினைக்கும் அளவுக்கு அவர் பிரபலமாகியுள்ளார். மேலும் பிரபல ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராயை அடுத்து ஹாலிவுட்டில் ஏகத்திற்கும் பிரபலமாகி இருப்பவர் பிரியங்கா சோப்ரா தான். அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் லைன் கட்டி நிற்கிறார்களாம்.

English summary
According to reports, Deepika Padukone's Hollywood dreams are crushed while Priyanka Chopra is enjoying great popularity over there.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil