twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெல்லி கொலை..2020 ஆம் ஆண்டே காதலி உதவி கேட்டு போலீஸுக்கு எழுதிய புகார்..கங்கனா ரனாவத் வெளியிட்டார்

    |

    டெல்லியில் காதலனுடன் சேர்ந்து லிவிங் டு கெதர் வாழ்ந்த காதலி 36 துண்டுகளாக வெட்டி கொலைச் செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
    2020 ஆம் ஆண்டே தன்னை காதலன் கொலை செய்ய முயல்வதாக பாதுகாப்பு கேட்டு காதலி ஷ்ரதாவாக்கர் எழுதிய கடிதத்தை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள்ளார்.
    இந்த தகவல் பரபரப்பாக பகிரப்படுகிறது, 2 ஆண்டுகளுக்கு முன் புகாரை பெற்ற போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

     லிவிங் டு கெதரில் வாழ்ந்த ஜோடி

    லிவிங் டு கெதரில் வாழ்ந்த ஜோடி

    மும்பையை சேர்ந்தவர் அப்தாப் அமீன். இவர் செஃப் ஆக இருந்தார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த மென் பொறியாளர் ஷ்ரத்தா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்துள்ளது. மும்பையில் Bumble என்ற டேட்டிங் ஆஃப் மூலம் பழக்கம் ஏற்பட்டு அங்கு லிவ் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இதனால் ஷ்ரத்தாவின் பெற்றோர் ஷ்ரத்தாவை ஒதுக்கி வைத்தனர். இதனால் இருவரும் ஹிமாச்சல பிரதேசுக்கு சென்று வசித்தனர் பின்னர் டெல்லி திரும்பிய இருவரும் டெல்லியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

     லிவிங் டு கெதர் வாழ்க்கை உயிரையே பறிக்க காரணமானது

    லிவிங் டு கெதர் வாழ்க்கை உயிரையே பறிக்க காரணமானது

    இதற்கிடையே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டு செலவுகள் யார் செய்வது தொடங்கி பல தகராறுகள் இருந்து வந்துள்ளது. அப்தாப்புக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை ஷ்ரத்தா கண்டுபிடித்துள்ளார். இதன் பின்னர் தகராறு அதிகரித்துள்ளது. லிவிங் டு கெதர் உறவு தொடர வேண்டாம் என ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி அப்தாப்பிடம் அடிக்கடி சண்டை இட்டு வந்துள்ளார்.

     கொலை செய்து உடலை சாகசமாக மறைத்த காதலன்

    கொலை செய்து உடலை சாகசமாக மறைத்த காதலன்

    அதற்கு அப்தாப் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 18 ஆம் தேதி வீட்டு மளிகை சாமான் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஷரத்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் அப்தாப். பின்னர் பிரிட்ஜ் ஒன்றை புதிதாக வாங்கி வந்து ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி தினமும் அதிகாலையில் உடல் பாகங்களை டெல்லியின் பல பகுதிகளில் வீசியுள்ளார். ஷ்ரத்தா உயிருடன் இருப்பது போலவே அவரது செல்போன் மூலம் நண்பர்களிடம் மெயிண்டெய்ன் செய்து வந்துள்ளார்.

     கொலை செய்து காதலி உயிருடன் இருப்பது போலவே நாடகமாடிய காதலன்

    கொலை செய்து காதலி உயிருடன் இருப்பது போலவே நாடகமாடிய காதலன்

    நண்பர்கள் சந்தேகத்தின் பேரில் ஷ்ரத்தாவின் அப்பாவிடம் தெரிவிக்க அவர் சந்தேகத்தின் பேரில் வந்து பார்த்து மகள் காணாமல் போனதை போலீசுக்கு தெரிவிக்க போலீஸ் அப்தாப்பை பிடித்து கைது செய்தனர். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த கொலையில் தற்போது திடீர் திருப்பமாக தன்னை அப்தாப் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் பாதுகாப்பு கேட்டு எவர் ஷைன் சிட்டி போலீசுக்கு ஷ்ரத்தா எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. இதை நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

     2020 ஆம் ஆண்டே கொலை செய்வதாக மிரட்டிய காதலன்

    2020 ஆம் ஆண்டே கொலை செய்வதாக மிரட்டிய காதலன்

    இந்த கடிதம் தற்போது வழக்கில் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டே கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக கடிதம் எழுதியுள்ளார். த்ன்னை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசுவேன் என மிரட்டியுள்ளதாக கூறியுள்ள கங்கனா, பின்னர் அந்தப்பெண்ணை அப்தாப் தனிமைப்படுத்தி டெல்லிக்கு அழைத்துச் சென்று தன் காரியத்தை நிறைவேற்றி விட்டார் என் பதிவிட்டுள்ளார்.

     கங்கனா ரனாவத் கடிதம் எழுப்பிய புதிய புயல்

    கங்கனா ரனாவத் கடிதம் எழுப்பிய புதிய புயல்

    "ஷ்ரத்தா பலகீனமான பெண் அல்ல, எல்லா பெண்களுக்கும் இருக்கும் பலகீனம் தான் அவளை வீழ்த்தியது. திருமண ஆசை எனும் வலையில் வீழ்த்தியுள்ளார்கள். ஷ்ரத்தா தாய்மை உணர்வு கொண்டவள், அவர் காதலை நம்பினால் எப்படியும் மாற்றிவிடலாம் என அந்த நபருடன் போராடினாள்" என பதிவிட்டுள்ளார். கங்கனாவின் பதிவு மூலம் மும்பை போலீஸ் ஷ்ராவத் கடிதத்தில் புகாரை பெற்றப்பின் என்ன செய்தார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    English summary
    A new twist has taken place in the case where the girlfriend, who was living together with her boyfriend, was hacked into 36 pieces in Delhi. Kangana Ranaut has released a letter written by their girlfriend Shraddhawalker asking for protection that her boyfriend is trying to kill her in 2020. This information is being shared in a frenzy and the question has been raised as to what action was taken by the police after receiving the complaint 2 years ago.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X