»   »  மோடி அறிவிப்பு சிம்பு படத்திற்கு நல்லதாப் போச்சு: கவுதம் மேனன்

மோடி அறிவிப்பு சிம்பு படத்திற்கு நல்லதாப் போச்சு: கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அச்சம் என்பது மடமையடா ரிலீஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பால் பிற படங்கள் ரிலீஸாகாததால் எங்களுக்கு அது நல்லதாகிவிட்டது என இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பான ஏ மாயா சேசாவே, அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பான சாஹசம் ஸ்வாசக சாகிப்போ படங்களின் ஹீரோ நாக சைதன்யா.

இந்நிலையில் நாக சைதன்யா பற்றி கவுதம் மேனன் கூறுகையில்,

நாக சைதன்யா

நாக சைதன்யா

நாக சைதன்யா தெலுங்கு ஹீரோவாக இருந்தாலும் அவர் தமிழில் நன்றாக பேசுவார். அவரை நான் நேரடி தமிழ் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறேன்.

மோடி அறிவிப்பு

மோடி அறிவிப்பு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அச்சம் என்பது மடமையடா ரிலீஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பால் பிற படங்கள் ரிலீஸாகாததால் எங்களுக்கு அது நல்லதாகிவிட்டது.

நான்கு ஸ்டார்கள்

நான்கு ஸ்டார்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்கள் 4 பேரை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் கவுதம்.

விக்ரம்

விக்ரம்

சிம்பு படத்தை முடித்துள்ள கவுதம் அடுத்ததாக விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இது குறித்து விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
Director Gautham Menon said that demonetisation helped AYM in a way as other films couldn't release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil