»   »  டிமாண்டி காலனி படத்தின் கதை என்ன?

டிமாண்டி காலனி படத்தின் கதை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு காலனியில் பல வருடங்களாக பேய் இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இதனை மையமாக வைத்து டிமாண்டி காலனி படத்தை உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அஜய் ஞானதாஸ்.

நடிகர் அருள்நிதி மற்றும் அவரது நண்பர்கள் டிமாண்டி காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வரும் போது அங்கு நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.


சிங்கம் புலி,மதுமிதா, சூது கவ்வும் ரமேஷ் திலக், சனத் மற்றும் அபிஷேக் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஹீரோயின் கிடையாது.


சிரிப்பு பேய் இல்ல சீரியஸ் பேய்

சிரிப்பு பேய் இல்ல சீரியஸ் பேய்

இப்போது வரும் அனைத்து பேய் படங்களும் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் வேளையில் இந்தப் படம் சீரியஸ் பேய் படமாம்.


யாவரும் நலம்,ஈரம் வரிசையில்

யாவரும் நலம்,ஈரம் வரிசையில்

மாதவன் நடித்த யாவரும் நலம் ஆதி நடித்த ஈரம் படங்கள் போல இந்தப் படம் செம திகில் படமாக இருக்குமாம்.


பேயாக மாறும் ஹீரோ

பேயாக மாறும் ஹீரோ

பேய்களின் அட்டகாசத்தால் பாதிக்கப் படும் அருள்நிதி ஒரு கட்டத்தில் பேயாக மாறி எல்லோரையும் பயமுறுத்த அதற்கு பின் என்ன என்பது கிளைமாக்ஸ்.


இசையமைப்பாளர்கள்

இசையமைப்பாளர்கள்

இசையமைப்பாளர் கெபா ஜெரிமியா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் டம்மி பீசு பாடலை இசையமைப்பாளர் டி.இமானும், வாடா வா மச்சி பாடலை கொலைவெறி புகழ் அனிருத்தும் பாடியுள்ளனர்.


ஜெயிப்பாரா

ஜெயிப்பாரா

அருள்நிதி பேயாக சாரி ஹீரோவாக ஜெயிப்பாரா ..முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்..


English summary
Demonte Colony is a 2015 Tamil horror film directed by Ajay Gnanamuthu, a former assistant of AR Murgadoss. The film featured Arulnithi in the lead role.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil