»   »  பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ: பயத்தில் தீபிகா படுகோனே

பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ: பயத்தில் தீபிகா படுகோனே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன்னை பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே.

தீபிகா படுகோனே நடித்துள்ள வரலாற்று படமான பத்மாவதி பல சிக்கல்களில் சிக்கியுள்ளது. படத்தின் பெயரை மாற்றுமாறும், 26 இடங்களில் கத்தரி போடுமாறும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து தீபிகா கூறியிருப்பதாவது,

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

பத்மாவதி கதாபாத்திரம் அழகு அல்ல ஆத்மா தொடர்புடையது. நான் பத்மாவதியாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒரு பிரேக் எடுத்து அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர வேண்டும். அதன் பிறகே அடுத்த படத்தில் நடிப்பேன்.

கஷ்டம்

கஷ்டம்

முன்பு நான் மன அழுத்தத்தால் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். என் அம்மாவிடம் கூட தெரிவிக்காமல் தனியாக தவித்தேன். பின்னர் டாக்டரை அணுகி உரிய சிகிச்சை எடுத்து குணமடைந்தேன்.

மீண்டும்

மீண்டும்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலும் அது மீண்டும் வந்துவிடுமோ என்ற பயம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. மன அழுத்தம் பற்றி பேச நான் வெட்கப்படவில்லை.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

சினிமா பின்னணி இல்லாமல் இந்த துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. இந்த துறை பாதுகாப்பானதாக நான் உணர்கிறேன் என்கிறார் தீபிகா.

English summary
Bollywood actress Deepika Padukone said that she is still scared that depression may come back and torture her. Deepika once suffered from depression took proper medical help to come out of it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X