twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த சிகிச்சை மேற்கொண்டால் மது அருந்தக்கூடாது.. ரைஸா விவகாரத்தில் மருத்துவர்கள் வெளியிட்ட உண்மை!

    |

    சென்னை: நடிகை ரைஸாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அவரது முகத்தில் வீக்கம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் மருத்துவர் பைரவி செந்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    Recommended Video

    Wrong Facial விவகாரம்.. Raiza-வின் புகார்..Doctor Bhairavi Senthil விளக்கம்

    நடிகை ரைஸா வில்சன் கடந்த வாரம் தனது வீங்கிய முகத்துடன் ஷேர் செய்த போட்டோ இணையத்தில் வைரலானது. தனக்கு தோல் மருத்துவர் பைரவி தவறான சிகிச்சை அளித்ததால் தனது முகம் வீங்கி போனதாகவும், கண்ணுக்கு கீழ் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் கூறினார்.

    பொன்னியின் செல்வன்… கம்பீரமான “குந்தவை“யாக மாறும் கீர்த்தி சுரேஷ்!பொன்னியின் செல்வன்… கம்பீரமான “குந்தவை“யாக மாறும் கீர்த்தி சுரேஷ்!

    மேலும் மருத்துவர் பைரவியிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பினார் நடிகை ரைஸா வில்சன். இந்நிலையில் தோல் மருத்துவர் பைரவி செந்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    கண்ணுக்கு கீழ் இருந்த குழி

    கண்ணுக்கு கீழ் இருந்த குழி

    அப்போது அவர் பேசியதாவது, முகத்தின் அமைப்பை அழகுப்படுத்த ரைஸா எடுத்துக்கொண்ட சிகிச்சைதான் இது. இதில் நான் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் என்னிடம் வந்தார். அவருடைய சம்மதத்துடன்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்ணுக்கு கீழ் இருந்த குழியை மறைக்க ரைஸாவுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

    குடிக்கக் கூடாது

    குடிக்கக் கூடாது

    இந்த சிகிச்சை எடுத்த 42 முதல் 72 மணி நேரம் வரை வீக்கம் இருக்கும். 24 மணி நேரம் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் ஆல்கஹால் எடுத்துக்கொள்ளக்கூடாது, ஸ்மோக் பண்ணக்கூடாது, எந்த ட்ரக்ஸும் எடுக்கக்கூடாது. வலி நிவாரணிகள் எடுத்திருந்தாலும் இதுபோன்று ஏற்படலாம். சத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் இதுபோன்று வீக்கம் ஏற்படும். இந்த சிகிச்சைக்கு பிறகு வெயிலில் அதிகம் செல்லக்கூடாது.

    மூன்று முறை சிகிச்சை

    மூன்று முறை சிகிச்சை

    சிகிச்சைக்கு பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவரை மூன்று முறை ரைஸா எங்களிடம் இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். எல்லாவற்றையும் படித்து பார்த்துதான் சிகிச்சைக்கு வந்தார். எந்த நேரத்திலும் சந்தேகம் கேட்க வாட்ஸ்அப் நம்பர் உள்ளது. மருத்துவர்களும் உள்ளனர்.

    டுயூட்டி டாக்டரை சந்தித்தார்

    டுயூட்டி டாக்டரை சந்தித்தார்

    இந்த சிகிச்சையை யாரும் யாருக்கும் கட்டாயப்படுத்தி பண்ண முடியாது. நாங்கள் பதிலளிக்கவில்லை என்று கூறுவது தவறு, அன்றே எங்களிடம் பேசினார். நாங்கள் மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தோம். ஆனால் மறுநாள் காலையில் வந்து எங்களின் டுயூட்டி டாக்டரை சந்தித்தார். மருந்துகளையும் பெற்று சென்றார்.

    10 வருஷமா சிகிச்சை

    10 வருஷமா சிகிச்சை

    அவர் ஆல்கஹால் எடுத்தார் என்று நாங்கள் சொல்லவில்லை. யாரையும் நாங்கள் தவறு சொல்லவில்லை. எங்களின் மருத்துவமனைக்கு களங்கம் ஏற்படுத்தியதால் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளோம். 10 வருஷமா இந்த சிகிச்சையை அளித்து வருவதாக கூறினார்.

    களங்கம் விளைவிக்கிறார்

    களங்கம் விளைவிக்கிறார்

    அவருக்கு அளிக்கப்பட்டது ஃபேசியல் இல்லை. சிகிச்சைக்கு பின்பு வீக்கம் வரும் என்று ஏற்கனவே கூறினோம். ரைஸா உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். இந்த சிகிச்சை அளித்தால் கொஞ்சம் வீக்கம் இருக்கும் என்று தெரிவித்தும் சிகிச்சை எடுத்துக்கொண்டு இப்போது எங்களின் மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார். இவ்வாறு மருத்துவர் பைரவி செந்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Dermatologist Bairavi Senthil explains about treatment given to Raiza wilson. Bairavi Senthil says after this treatment patient do not consume alcohol or any other drugs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X