Desiya Thalaivar Box Office - தேசிய தலைவர் பாக்ஸ் ஆஃபிஸ் எவ்வளவு தெரியுமா?.. இதோ முழு விவரம்

சென்னை: பஷீர் நடிப்பில் அரவிந்த்த ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தேசிய தலைவர் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறான இப்படம் நீண்ட வருடங்கள் தயாரிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாட்கள் கழித்து வெளியான அந்தப் படம் வசூலில் பெரிய தாக்கத்தை இதுவரை ஏற்படுத்தவில்லை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேசிய போராளியாகவும், தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவராகவும், ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகவும் திகழ்ந்தவர். சுபாஷ் சந்திர போஸ் வழியை சுதந்திர போராட்டத்தில் தேர்ந்தெடுத்த அவரது பாதையை இன்னும் பலர் தேர்ந்தெடுத்தார்கள். இதனால் அவர் இன்றுவரை பலராலும் கொண்டாடப்படுகிறார். இப்படிப்பட்ட சூழலில் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டார்கள்.

தேசிய தலைவர்: படத்துக்கு தேசிய தலைவர் என்று பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தை சத்யா தயாரிக்க ஊமை விழிகள் படத்தை இயக்கிய அரவிந்த ராஜ் இயக்கியிருக்கிறார். முத்துராமலிங்க தேவராக பஷீர் நடித்திருக்கிறார். இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். தேவரை கொண்டாடும் அனைவருமே இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று படக்குழுவினர் ஆடியோ வெளியீட்டு விழாவில் உரிமையுடன் கோரிக்கை வைத்திருந்தார்கள்.

Desiya Thalaivar Box Office Disaster Pasumpon Muthuramalinga Devar Biopic Collects Only 15 Lakhs

கூட்டம் எப்படி?: தேவர் ஜெயந்தி அன்று படமானது ரிலீஸானது. முத்துராமலிங்க தேவரை யாரெல்லாம் கொண்டாடுகிறார்களோ அவர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்கள் சிலரும் படம் பார்க்க சென்றார்கள். ஆனால் படம் பார்த்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேவரின் வாழ்க்கை வரலாற்றை எடுப்பது சரிதான்; ஆனால் அதில் சில பிழைகளோடு எடுத்திருக்கிறார்கள் என்பது ஒருதரப்பினரின் கருத்து. சோஷியல் மீடியாவில் கூட பார்வர்ட் பிளாக் கட்சியின் எம்பி சீட் தொடர்பான காட்சியை போட்டு இதில் ஏகப்பட்ட தவறுகள் இருப்பதாக கூறினார்கள்.

டெக்னிக்கலாகவும் வீக்: இது மட்டுமின்றி டெக்னிக்கலாகவும் படம் படு வீக்காகவே அமைந்துவிட்டது. ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை, நடிகர்களின் நடிப்பு, இயக்குநரின் மேக்கிங் என எதுவுமே படத்துக்கு கைகொடுக்கவில்லை. திரைப்படம் எடுக்க தெரியாதவர்கள்கூட இந்தப் படத்தின் மேக்கிங்கை பார்த்து கழுவி கழுவி ஊற்றுவார்கள் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக அமைந்துவிட்டது.

வசூலிலும் அடி: இந்நிலையில் அப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் அப்படம் முதல் நாளில் மூன்று லட்சம், இரண்டம் நாள் மற்றும் மூன்றாம் நாளில் முறையே ஐந்து லட்சம், நான்காம் நாளில் 2 லட்சம் என மொத்தம் இதுவரை இந்தியாவில் 15 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் கூறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X