twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஜி.ஆர். வாழ்க்கையை புரிந்து கொள்வது கஷ்டம்: இயக்குனர்

    |

    சென்னை: எம்ஜிஆரின் வாழ்க்கையை புரிந்துகொள்வது கடினம் என இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    காமராஜ், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கியவர் பாலகிருஷ்ணன். இப்போது மறைந்த நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்.

    Details about MGR biopic!

    இப்படம் குறித்து பேட்டியளித்துள்ள பாலகிருஷ்ணன், எம்ஜிஆரின் உண்மையான வாழ்க்கை என்ன என்பதை படமாக்க முயற்சிக்கிறோம். அது அவ்வளவு எளிதல்ல. எல்லோரும் எம்ஜிஆரின் திரைவாழ்க்கையை ரசித்து அதன் மூலம் ஒரு புரிதலில் உள்ளனர். அதைத் தாண்டி எம்ஜிஆர் யார், அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை இப்படத்தில் சொல்ல முயற்சிக்கிறோம். சினிமாவுக்கு முந்தைய எம்ஜிஆரின் வாழ்க்கை, நாடகங்களில் அவர் ஆற்றிய பங்கு, அவர் சந்தித்த சோதனைகள், இவையெல்லாம் எளிதில் புரிந்துகொள்ளும்படி இல்லை. குறிப்பாக சொல்லப்போனால், காமராஜரின் வாழ்வைப் போலவோ, மகாத்மா காந்தியின் ஆரம்ப காலம் போலவோ அவ்வளவு எளிதாக இல்லை என்கிறார்.

    இப்படத்தில் எம்ஜிஆரின் மற்றொரு பக்கத்தை நீங்கள் பார்க்கலாம். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த இயக்குனர். இப்படத்தில் அவருடைய பால்ய வயது, இளமைக்காலம், நடிகராக இருந்தது மற்றும் அரசியல் வாழ்க்கை என அனைத்தையும் காண்பிக்க உள்ளோம். இதில் எம்ஜிஆராக சதீஷும், இளம் வயது எம்ஜிஆர் ஆக அத்வைத்தும் நடிக்கின்றனர்.

    எம்ஜிஆரின் மனைவி ஜானகியாக பிக்பாஸ் ரித்விகா நடிக்கிறார். இப்படத்தில் கருணாநிதி கதாபாத்திரத்திற்கும், ஜெயலலிதாவாக யார் நடிக்கப்போகிறார் என்பதும் இன்னும் முடிவாகவில்லை. எம்.ஆர்.ராதாவாக பாலசிங் நடிக்கிறார். இயக்குனர் பிஆர்.பந்த்லுவாக ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார். எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு நடிக்கிறார். சென்னை, பாலக்காடு மற்றும் திருப்போரூரில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    English summary
    MGR biopic movie director Balakrishna says, his life is not much easy to understand.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X