»   »  கோவர்தன் மாஸ்டருக்கு உதவிய அம்மாவுக்கு நன்றி... - இசையமைப்பாளர் தேவா

கோவர்தன் மாஸ்டருக்கு உதவிய அம்மாவுக்கு நன்றி... - இசையமைப்பாளர் தேவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த இசையமைப்பாளர் கோவர்தன் மாஸ்டருக்கு முதல்வர் ஜெயலலிதா உதவி செய்ததற்காக இசையமைப்பாளர் தேவா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இயல், இசை,நாடகம், நாட்டியம் திரைப்படம் மற்றும் கிராமியக் கலைகள் என பல தரப்பட்ட கலைப் பிரிவுகளை சார்ந்த கலைஞர்களுக்கு அம்மா அவர்கள் எண்ணற்ற உதவிகளை செய்துவருகிறார்கள்.

Deva thanked CM Jayalalithaa

அத்துடன் நமது பாரம்பரிய கிராமிய கலைகளையும், கலைஞர்களையும் வெளி நாடுகளிலும் புகழ் பெரும் வண்ணம் நிதியுதவி வழங்கி கௌரவித்து வருகிறார்.

அவ்வகையில் தான் திரைப்பட இசையமைப்பாளர் கோவர்தன் மாஸ்டர் அவர்களுடைய வறுமை நிலையினை மனதில் கொண்டு தாயுள்ளத்தோடு, புரட்சி தலைவி அம்மா அவர்கள் ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் வாயிலாக முதல்வர் அம்மா அவர்கள் இசை குடும்பத்தினர் மீது எந்த அளவிற்கு கருணையும், பற்றுதலும் கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

கடவுள் மனித ரூபத்தில் வந்து பக்தர்களுக்கு உதவிகளை செய்வார் என்று கூறுவார்கள். அது போன்று புரட்சி தலைவி அம்மா அவர்கள் கோவர்தன் மாஸ்டர் அவர்களுக்கு இந்த பேருதவி செய்ததற்கு ஒட்டுமொத்த இசைக் குடும்பங்களின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

English summary
Music Director Deva has conveyed thanks to CM Jayalalithaa for her timely aid to veteran music director Govadhan Master.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil