For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தேவா இசை நிகழ்ச்சி மேடையில் வருத்தப்பட்ட ரஜினி... போட்டிப் போட்டு செல்ஃபி எடுத்த மீனா, மாளவிகா!

  |

  சென்னை: முன்னணி இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா நேற்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார்.

  தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அவரது பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் வருத்தப்பட்ட காணொலி வைரலாகி வருகிறது.

  தேவா The தேவா நிகழ்ச்சியில் பாட்ஷா வராம எப்படி.. மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்! தேவா The தேவா நிகழ்ச்சியில் பாட்ஷா வராம எப்படி.. மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்!

  தேனிசைத் தென்றலின் பிறந்தநாள்

  தேனிசைத் தென்றலின் பிறந்தநாள்

  தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா, நேற்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தேவாவின் பாடல்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என கோலிவுட் டாப் ஹீரோக்களுக்கு ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் தேவா. இந்நிலையில், தேவாவின் பிறந்தநாளுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

  தேவா தி தேவா

  தேவா தி தேவா

  தேவாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 'தேவா தி தேவா' என்ற இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த இசைக் கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, மீனா, மாளவிகா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தேவாவின் இசை நிகழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர். இதில், தேவாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் இசைக்கப்பட்டன.

  பாட்ஷா பிஜிஎம் உடன் மேடையேறிய ரஜினி

  பாட்ஷா பிஜிஎம் உடன் மேடையேறிய ரஜினி

  அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா தான், சூப்பார் ஸ்டார் என்ற ஸ்லோகனுக்கு மாஸ் பிஜிஎம் கம்போஸ் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பாட்ஷா படத்தில் ரஜினிக்காக அவர் போட்ட தீம் மியூசிக்கும் தரமான சம்பவம் செய்தது. அதே தீம் மியூசிக்குடன் 4 பேர் பாடிகாட்டாக ரஜினியின் பின்னால் அணிவகுக்க, செம்ம கெத்தாக மேட்டையேறினார் சூப்பர் ஸ்டார். லைவ்வான பாட்ஷா தீம் மியூசிக்கில் ரஜினி சிங்க நடை போட்டது அங்கிருந்த ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்தது.

  வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார்

  வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார்

  அதன்பின்னர் பேசிய ரஜினிகாந்த், ஒரு செய்தியை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். "சிங்கப்பூர் அதிபராக இருந்த நாதன் தமிழராக பிறந்து மலேசியாவில் வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன் அவருடயை உயிலில் கடைசி ஆசையாக, பொற்காலம் படத்தில் இடம்பெற்ற 'தஞ்சாவூரு மண்ணு' பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும். தான் இறந்த பிறகு அந்தப் பாடலை ஒலிக்க விட்டு, எனது உடலை எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கூறியிருந்தார். அவரது விருப்பத்தை ஏற்று, நாதன் உயிரிழந்தபின் அவரது இறுதி ஊர்வலத்திற்கு முன்னர் உலகத் தலைவர்கள் முன்னிலையில் அந்தப் பாடல் ஒலிக்கப்பட்டது. தஞ்சாவூர் மண்ணு பாடலுக்கு இசையமைத்தவர் நம்ம தேவா தான்." எனக் கூறினார்.

  வைரலாகும் வீடியோ

  வைரலாகும் வீடியோ

  தொடர்ந்து பேசிய ரஜினி, "இந்த நிகழ்வை குறிப்பிட்டு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாய்ந்து, ஹாங்காங் உட்பட பல நாடுகளில் அந்தப் பாடலை மொழிப் பெயர்த்து பத்திரிக்கையில் விளக்கியிருந்தனர். ஆனால், எந்த தமிழ் ஊடகங்களும் அதுகுறித்து எழுதவில்லை. இதனால் தேவாவின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளிவுலகிற்கு சொல்ல வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். ரஜினியின் இந்த பேச்சு, வைரலாகி வருகிறது. இதனிடையே, தேவா இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகைகள் மீனாவும், மாளவிகாவும் ரஜினியுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். இருவருமே ரஜினியுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Deva's 72nd birthday concert was held in Chennai. In this, celebrities including Rajinikanth, Meena, and Malavika participated. Rajini spoke then, When Singapore Former President Nathan died, his favorite song "Thanjavuru Mannu" was played in his Final Journey. Singapore, Malaysia.. even Thailand media covered this news. but in Tamil Nadu, single media has not covered this news.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X