»   »  இயக்குநராகிறார் பிரபுதேவா

இயக்குநராகிறார் பிரபுதேவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆடியது போதும் ஆட்டுவிக்கலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார் பிரபுதேவா.

கோரியோகிராபி என அழைக்கப்படும் நடனமைப்புக்கு தமிழ் சினிமாவில் மரியாதை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் நடனஇயக்குநர் சுந்தரமும், அவரது மகன்கள் ராஜூ சுந்தரமும், பிரபு தேவாவும்.

புலியூர் சரோஜா போன்ற மட்டமான டான்ஸ் மாஸ்டர்கள் பீல்டை கெடுத்துக் கொண்டிருந்தபோது சுந்தரம் அதை மாற்றினார்.தொடர்ந்து அவரது மகன்களும் நவீனத்தை அறிமுகப்படுத்தினர். வெறுமனே டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் சொல்லிக் கொடுப்பதுமட்டுமே டான்ஸ் மாஸ்டரின் வேலை என்பதை மாற்றி, புன்னகை வரவழைக்கும் நகாசு வேலைகளுடன் இவர்கள் அமைத்தநடனக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. நடன இயக்குநர்கள் திரையில் தோன்றி ஆடியது இவர்கள் வரவுக்குப்பின்தான்.

அதிலும் பிரபுதேவாவின் புயல் வேக நடனம் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைத் தந்ததோடு, கதாநாயகன்வாய்ப்பையும் கொடுத்தது. ஆனால் துரதிஷ்டம், இவர் கதாநாயகனாக நடித்த காதலன் படத்தைத் தவிர எஞ்சிய படங்கள்அனைத்தும் தோல்வியைத் தழுவின.

நடிப்பு நமக்கு சரிவராது என்று முடிவெடுத்தாரோ என்னவோ, இப்போது டைரக்ஷன் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார்(ஏமாந்த தயாரிப்பாளர் யாரோ?). பாய்ஸ் படத்தில் நடித்த சித்தார்த்தை கதாநாயகனாகவும், த்ரிஷாவை கதாநாயகியாகவும்வைத்து இவர் இயக்கப்போவது தமிழ் படமல்ல. தெலுங்குப் படமாகும் (தமிழ் ரசிகர்கள் தப்பினார்கள்!!)

மார்ச் 14ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்குகிறார். வர்ஷம் படத்தின் வெற்றியால் த்ரிஷா தெலுங்கில் தனது கவர்ச்சிக் கொடியைஉயரப் பறக்க விட்டுள்ளார்கள். தமிழில் சாமி படத்தில் மாமியாக தாவணி கட்டி, நடித்தவர் தெலுங்கில் சம்பளம் அதிகம்என்பதால், சம்பிரதாயத்துக்கு மட்டும் கொஞ்சூண்டு துணி உடுத்தி நடிக்கிறாராம்.

இதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் நமீதா, ஆஷின் ஆகியோரையெல்லாம் மறந்துவிட்டு த்ரிஷா கால்ஷீட்டுக்காகக்காத்திருக்கிறார்கள். த்ரிஷா இப்போது விஜய்யுக்கு ஜோடியாக கில்லி, அஜித்துக்கு ஜோடியாக ஜி, மணிரத்னத்தின் ஆய்தஎழுத்து என தமிழ்ப் படங்களில் பிஸியாக இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil