»   »  மெட்ராஸ் டீமும் தேவதாஸ் பிரதர்ஸும்!

மெட்ராஸ் டீமும் தேவதாஸ் பிரதர்ஸும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திலகர் படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் நாயகன் துருவா, மெட்ராஸ் படத்தில் ஜானியாக வாழ்ந்து காட்டிய ஹரி, ராஜதந்திரம் படத்தில் அடையாளம் காணப்பட்ட அஜய் பிரசாத், டார்லிங் படத்தை கலகலப்பாக்கிய பாலசரவணன்...

இப்படி தனித்தனியாக முத்திரை பதித்த ஒவ்வொருவரும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். படத்துக்குப் பெயர் 'தேவதாஸ் பிரதர்ஸ்'.

Devadass Brothers first look launched

தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வையை கபாலி இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட, நடிகர் கலையரசன் பெற்றுக்கொண்டார். மெட்ராஸ் ஜானியின் படம் என்பதால் மெட்ராஸ் டீமே தங்கள் படமாக நினைத்து பங்கேற்றது. இதில் மெட்ராஸ் ரித்விகாவும் பங்குகொண்டார்.

"தேவதாஸ் பிரதர்ஸ் என்பதால் குடும்பம் சார்ந்த கதையோ என எண்ண வேண்டாம். குடும்பத்தோடு பார்க்கக் கூடிய காதல், நட்பு, நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகி இருக்கிறது. மாநகரத்தை நோக்கி வரும் நான்கு வெவ்வேறு இளைஞர்களை ஒன்றிணைக்கும் இந்த தேவதாஸ் பிரதர்ஸ் படம் குடும்பங்களை திரையரங்குகள் பக்கம் ஈர்க்கும் வகையில் கோடை விடுமுறையில் வரவிருக்கிறார்கள்," என்கிறார் படத்தின் இயக்குநர் கே ஜானகிராமன். இயக்குநர்கள் சற்குணம், ஐஸ்வர்யா தனுஷ், வேல்ராஜ் ஆகியோரிடம் சினிமா பயின்றவர்.

Devadass Brothers first look launched

எக்ஸட்ரா எண்டர் டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா ஆகியோர் தயாரிக்கும் இந்தப் படத்தில் துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், 'மெட்ராஸ்' ஹரிகிருஷ்ணன் என 4 பேர் நாயகர்கள். சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா ஷெட்டி, தீப்தி மன்னே, ஆரா என 4 நாயகிகள். மயில்சாமி, ரோபோ சங்கரும் நடிக்கின்றனர்.

Devadass Brothers first look launched

படத்துக்கு ஒளிப்பதிவு எம்.சி.கணேஷ் சந்திரா. இவர் 'சலீம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். இசை தரண்குமார் -இவர் 'போடா போடி' ,'நாய்கள் ஜாக்கிரதை' படங்களுக்கு இசையமைத்தவர், கலை- 'குற்றம் கடிதல்'பிரேம், பாடல்கள்- யுகபாரதி ,படத்தொகுப்பு -'வேலையில்லா பட்டதாரி' எம்.வி.ராஜேஷ்குமார்.

English summary
The whole team of Madras including director Ranjith have participated in the first look launch of Devadass Brothers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil