»   »  ரிஸ்க் எடுக்கும் தேவயானி!

ரிஸ்க் எடுக்கும் தேவயானி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவை விட்டுவிட்டு டிவிப் பக்கமாக ஒதுங்க ஆரம்பித்துவிட்ட தேவயானிக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடிக்கிறது. மீண்டும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

மும்பை, தெலுங்கு கவர்ச்சி பூகம்பங்களின் பக்கத்தில் நிற்க முடியாமல் நைசாக சினிமாவை விட்டு ஒதுங்கியவர் தேவயானி.

கடைசியாக கணவர் ராஜகுமாரனுக்காக ஒரு படம் தயாரித்து பெரும் நஷ்டப்பட்டு, மதுரை கந்து வட்டி கும்பலிடம் சிக்கினார். டிவியில் நடித்து நடித்து அந்தக் கடனைஅடைத்தார்.

கணவருக்கு புதிய படம் இயக்க வாய்ப்பு ஏதும் இல்லாவிட்டாலும், தேவயானி டிவியில் பிஸி. கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டு விலகி டிவியில்ஐக்கியமாகி வருகிறார்.

எஸ்ஜே சூர்யாவின் நியூ படம் தவிர எப்போதாவது ஒன்றிரண்டு படங்களில் சின்னச் சின்னதாய் ஏதாவது ரோல்கள் செய்தாலும் கவனத்தை முழுவதும் டிவி பக்கமேதிருப்பியுள்ளார்.

இந் நிலையில் கணவரை அழைத்துக் கொண்டு கோவில் கோவிலாக படியேறிக் கொண்டிருக்கிறார் தேவயானி. குழந்தை வரம் கேட்டு என்கின்றனர் சிலர். ஆனால்மற்றவர்களோ இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என தேவயானி ஒத்தி வைத்துவிட்டார், கணவருக்கு மீண்டும் சினிமாவில் பிரேக் கிடைக்கத் தான்கோவில்களுக்குச் சென்று வருகிறார் என்கின்றனர்.

எது எப்படியோ.. ராஜகுமாரனுக்கு இதுவரை சினிமாவை இயக்கும் வாய்ப்பு ஏதும் வராவிட்டாலும் தேவயானியை மீண்டும் ஹீரோயினாக நடிக்ககோடம்பாக்கம் அழைத்து விடுத்துவிட்டது.

படத்தின் பெயர் உணர்ச்சிகள். திருமண வயதைக் கடந்தும் மணமாகாத ஒரு பெண்ணின் உணர்ச்சிகளைச் சொல்லும் படமாம். கொஞ்சம் விவகாரமான படம் தான்என்றாலும் தேவயானி கவர்ச்சி காட்டப் போவில்லையாம். குடும்பம், கலாச்சாரம், தியாகம் என உலலும் பெண்ணின் கதையாம்.

படத்தை இயக்குவது கோடம்பாக்கத்தில் எப்போதும் ஏதாவது பிரச்சனையில் இருந்து கொண்டே இருக்கும் கே.ராஜன் தான்.

தேவானி தவிர சிந்தூரி, ஷர்மிலி ஆகிய கவர்ச்சி பாம்களும் இந்தப் படத்தில் வெடிக்கப் போகின்றன.. ஸாரி நடிக்கப் போகின்றன. கதாநாயகன் புதியவர்.

மைசூர், ஹைதராபாத் பக்கமாய் சூட்டிங்கை நடத்தவுள்ளார்களாம்.

இந்தப் படம் தவிர அகத்தியனின் இயக்கத்தில் வேடந்தாங்கல் என்ற ஒரு படத்திலும் தேவயானி நடிக்கிறார். ஹீரோயினாக அல்ல, ஆனாலும் ஒரு நல்லவேடமாம்.

காதல் கோட்டை மூலம் தேவயானிக்கு கதாநாயகி அந்தஸ்து வாங்கித் தந்தவர் அகத்தியன் தான்.

ராமகிருஷ்ணா என்ற படம் எடுத்து நஷ்டம் சந்தித்துவிட்ட அகத்தியன் தன்னை மீண்டும் நிரூபிக்க கையில் எடுத்துள்ள புராஜெக்ட் தான் வேடந்தாங்கல். தனக்குசினிமாவில் வாழ்வளித்த அகத்தியனுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ரொம்பச் சின்ன வேடமாக இருந்தாலும் ஓகே சொல்லிவிட்டாராம் தேவயானி.

இந்தப் படத்தில் ஹீரோ நந்தா.

இதற்கிடையே கணவருக்கு சினிமாவில் மறுவாழ்வு தர தானே ஒரு படத்தை மீண்டும் தயாரிக்கலாமா என்ற திட்டத்தில் தேவயானி இருப்பதாகவும்சொல்கிறார்கள்.

எதுக்கு இந்த ரிஸ்க் தேவயானி!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil