'இது தளர்வுதான், கோவிட் தொற்று முழுசா போயிடலை' கொரோனா விழிப்புணர்வு படத்தில் நடிகை தேவயானி!
சென்னை: நடிகை தேவயானி, கொரோனா விழிப்புணர்வுக்கான படத்தில் நடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன.
இந்த வைரஸால் பாதிகப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொற்று காரணமாக
இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இந்தியாவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்து 20 ஆயிரத்து 538 ஆக அதிகரித்து இருக்கிறது.

மக்கள் பாதிப்பு
இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்தன. கடந்த மார்ச் மாதம் முதல் விதிக்கப்பட்ட இந்த ஊரடங்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் வாழ்வாதாரத்துக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை தொடங்கியுள்ளனர்.

விழிப்புணர்வு
ஆனால், கொரோனா இல்லை என்பது போல முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பலர் இருந்து வருகின்றனர். இது அரசை, கவலை அடைய செய்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே கொரோனா விழிப்புணர்வு பிரசார வீடியோவை வெளியிட்டிருந்த தமிழக அரசு, இப்போது மீண்டும் விழிப்புணர்வு படங்களை வெளியிட இருக்கின்றன.

பண்ணை வீட்டில் ஷூட்டிங்
இதில் நடிகை தேவயானி நடித்துள்ளார். கொரோனா காரணமாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தில், தேவயானி கணவர் ராஜகுமாரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருக்கிறார் தேவயானி. அங்கு கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன் எடுத்துள்ளனர்.

இலவச முக கவசங்கள்
நடிகை தேவயானி, முகக்கவசத்தின் அவசியம் பற்றியும் சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவை குறித்து இதில் பேசுகிறார். இதை பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வேல்முருகன் இயக்கி உள்ளார். சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த விழிப்புணர்வு பட ஷூட்டிங்கின் போது, நடிகை தேவயானி, சுமார் 100 பேருக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்.


Click it and Unblock the Notifications











