»   »  தேவி.... 'பிரபு தேவாவின் அந்த ஒரு டான்சுக்கே கொடுத்த காசு சரியாப் போச்சு'!

தேவி.... 'பிரபு தேவாவின் அந்த ஒரு டான்சுக்கே கொடுத்த காசு சரியாப் போச்சு'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வெள்ளிக்கிழமை 3 முக்கிய படங்கள் வெளியாகின. அவை வெளியாகும் வரை மூன்றைப் பற்றியும் கலவையான கருத்துகள் வெளிவந்த வண்ணமிருந்தன.

குறிப்பாக பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படம் குறித்து எந்த கருத்துமில்லை. படம் வெளியானதா இல்லையா என்றே தெரியவில்லை என்று சிலர் கூறிவந்த நிலையில், நேற்று மாலை முதல் படம் குறித்து சாதகமான கருத்துகள் வெளியாகத் தொடங்கின.


Devi a different horror movie

தொடர்ந்து சென்னை மற்றும் புற நகர்களில் அனைத்து அரங்குகளிலுமே படம் ஹவுஸ்ஃபுல். இன்று சனிக்கிழமை தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ரெமோவுக்கு இணையாக தேவிக்கும் கூட்டம். காட்சிகளையும் இன்று அதிகப்படுத்தியுள்ளனர். ஆன்லைனில் அனைத்து ஷோக்களும் ஃபுல்.


படத்தைப் பார்த்த சினிமா ரசிகர்கள், "இதுவரை வெளியான பேய்ப் படங்களில் தேவி வித்தியாசமானது. எந்த எதிர்ப்பார்ப்புமின்றி போய் உட்கார்ந்தால், படம் நம்மை நிச்சயம் திருப்திப்படுத்துகிறது. குறிப்பாக பிரபுதேவாவின் அந்த ஒரு டான்சுக்கே நாம கொடுத்த காசு சரியாப் போயிடுது," என்று தெரிவித்துள்ளனர்.


Devi a different horror movie

தமன்னா - பிரபு தேவா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படம், பிரபு தேவாவுக்கு தமிழில் புது இன்னிங்சைத் தொடங்கி வைத்துள்ளது என்கிறது கோடம்பாக்கம்.

English summary
Box office reports say that Prabbu Deva's Devi movie has satisfied the movie goers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil