»   »  'தேவி'க்காக தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை: விஜய்

'தேவி'க்காக தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை: விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேவி படத்திற்காக தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்த தேவி படம் கடந்த 7ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. தேவி தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியானது.


மூன்று மொழிகளிலுமே படம் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.


வெற்றி, தோல்வி

வெற்றி, தோல்வி

திரையுலகில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால் தொடர்ந்து தோல்வியை தழுவினால் படைப்பாளிகளுக்கு சோர்வு ஏற்பட்டுவிடும். அண்மையில் எனக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டன என்கிறார் விஜய்.


தேவி

தேவி

பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மனதை ஒருநிலைப்படுத்தி தேவி படத்திற்காக கஷ்டப்பட்டேன். என கடின உழைப்பு வீண் போகவில்லை. அதற்கான பலனாக படம் மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என விஜய் தெரிவித்துள்ளார்.


மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தேவி படம் பட்டி தொட்டியெல்லாம் நன்றாக ஓடுவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றி கண்டிப்பாக தேவை என்ற நேரத்தில் எனக்கு தேவி மூலம் வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என விஜய் கூறியுள்ளார்.


கஷ்டம்

கஷ்டம்

தேவி படத்தை ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் எடுத்ததால் இரவு, பகல் பார்க்காமல் தூக்கமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டதாக விஜய் முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Director AL Vijay said that his trilingual movie Devi has become a hit at a time he was longing for one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil