»   »  செப்டம்பர் 9ல் தேவி ரிலீஸ்... மணமுறிவு பற்றி மவுனம் கலைத்த ஏ.எல்.விஜய்

செப்டம்பர் 9ல் தேவி ரிலீஸ்... மணமுறிவு பற்றி மவுனம் கலைத்த ஏ.எல்.விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபுதேவா தமன்னா நடிப்பில் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள படமான தேவி செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவி படத்தை பிரபுதேவாவுடன், பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர். கணேஷும் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

ஜி.வி பிரகாஷின் இசையில் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஆகஸ்ட் மாதம் வெளியிட நாள் பார்த்துவரும் படக்குழு, படத்தின் வெளியீட்டு தேதியை இப்போதே முடிவு செய்துவிட்டது.

பிரபுதேவாவின் தேவி

பிரபுதேவாவின் தேவி

எங்கள் அண்ணா படத்திற்குப் பின் ஒரு முழுநேர நடிகராக அவரை தமிழுக்கு மீண்டும் அழைத்துவந்தது, இயக்குனர் விஜயின் ‘தேவி'. பிரபு தேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ள இந்த படத்தில் ‘ஐ' அழகி ஏமி ஜாக்சன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஏ.எல் விஜய் மகிழ்ச்சி

ஏ.எல் விஜய் மகிழ்ச்சி

மும்மொழி திரைப்படமாக ஒரே நாளில் வெளிவருகிறது தேவி. இந்த படத்தை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று படத்தின் இயக்குனர் விஜய் கூறியுள்ளார். தேவி படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிஸியாகி விட்டார் ஏ.எல். விஜய்.

மணமுறிவு

மணமுறிவு

பிஸியாக இருக்கும் விஜயிடம் மணமுறிவை பற்றிய கேள்வியை எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு அவர், இதைப்பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை என்று கூறினார். இருகுடும்பங்களும் பேசிவருகின்றனர், என் குடும்பம் என்ன முடிவு செய்கிறார்களோ, அதன்படி நடப்பேன் என்று கூறியுள்ளார்.

நீடிக்கும் பிரச்சினை

நீடிக்கும் பிரச்சினை

திருமணத்திற்கு பின்னும் சினிமாவில் மும்மறம் காட்டிவரும் அமலா பாலின் போக்கை ஏ.எல். விஜய் குடும்பத்தினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும், ஏ.எல். விஜய் - அமலா பால் இருவரிடையே கருத்து முரண்பாட்டின் காரணமாக தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருவதாக கூறி வருகின்றனர்.

English summary
Rare days like 9.9.2016 with a total combo of the universally accepted lucky number nine need another special occurrence to be highlighted. Devi (L) starring Prabhu Deva and Tamannah in the lead, directed by Director Vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil