»   »  தம்மாத்துண்டு ரோடு, ரோட்டுக்கு இந்தான்ட நான் ரொம்ப நல்லவன், அந்தான்ட நான் ரொம்ப கெட்டவன்!

தம்மாத்துண்டு ரோடு, ரோட்டுக்கு இந்தான்ட நான் ரொம்ப நல்லவன், அந்தான்ட நான் ரொம்ப கெட்டவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை அறிந்தால் படத்தில் அஜீத் பேசும் வசனம் ஸ்டைலில் தண்ணில கண்டம் படத்தில் மொட்டை ராஜேந்திரன் ஒரு வசனம் பேசியுள்ளார்.

எஸ்.என்.சக்திவேல் இயக்கியுள்ள இவனுக்கு தண்ணில கண்டம் படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது. டீஸரில் மொட்டை ராஜேந்திரன் தனது ஜிம் பாடியை காட்டி மிரட்டுகிறார்.

Dhammaathundu roadu: Says Rajendran

மேலும் என்னை அறிந்தால் படத்தில் அஜீத் கூறும் ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன் என்ற வசனத்தை சற்று மாற்றி பேசுகிறார் ராஜேந்திரன்.

ஒரு தம்மாத்தூண்டு ரோடு, ரோட்டுக்கு இந்தாண்ட நான் ரொம்ப நல்லவன் குட் பாய், ரோட்டுக்கு அந்தாண்ட நான் ரொம்ப கெட்டவன் என்று ராஜேந்திரன் வசனம் பேசுகிறார். இந்த டீஸரை யூடியூப்பில் இதுவரை 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ராஜேந்திரன் நகைச்சுவை வேடங்கள் முதல் வில்லன் வேடம் வரை பலவகை கதாபாத்திரங்களில் நடித்து அசத்துகிறார். திருடன் போலீஸ் படத்தில் ராஜேந்திரன் பெண் வேடம் போட்டு ரசிகர்களை அசத்தினார்.

எந்த வேடமாக இருந்தாலும் நச்சென்று நடித்து வருகிறார் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajendran is speaking a dialogue in Ivanuku Thannila Gandam similar to the one in Yennai Arindhaal.
Please Wait while comments are loading...