Bigg Boss Tamil 6: அதிரடியாக கீழே இறங்கிய தனலட்சுமி.. இந்த வாரம் இவர் தான் எவிக்ட் ஆகிறாரா?
சென்னை: நிவாஷினி தான் இந்த வாரம் எவிக்ட் ஆகிறார் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் சில அதிரடி மாற்றங்கள் இந்த வாரம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன் போல இல்லாமல், இந்த 6வது சீசனில் யார் எலிமினேட் ஆவார். யார் டைட்டில் வின் பண்ணுவாங்கன்னு எதையுமே கெஸ் செய்ய முடியவில்லை.
டாப்பில் இருந்த பல போட்டியாளர்களின் வாக்குகள் திடீரென சரிந்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நிவாஷினி இல்லை
இந்த வாரம் அசீம், ஜனனி, கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி, குயின்ஸி உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், சிங்கப்பூர் போட்டியாளரான நிவாஷினி தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிவாஷினி அதிரடியாக திடீரென பல படிகள் முன்னேறி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சேஃப் ஜோன்
அசீம், ஜனனி, கதிரவன், ராபர்ட் மாஸ்டரை தொடர்ந்து இந்த வாரம் நிவாஷினியும் சேஃப் ஜோனுக்கு சென்று விட்டார் என்றே பிரைவேட் போலிங் கருத்துக் கணிப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற விதத்தில் இந்த வார எவிக்ஷன் இருக்கும் என முன்பே கூறியது போல கடைசி நேர ட்விஸ்ட்டுகள் அரங்கேறி வருகின்றன.

தடுக்கி விழுந்தவர்கள்
இந்த வாரம் ரசிகர்கள் ஆதரவோடு முன்னிலையில் இருந்து வந்த தனலட்சுமி, குயின்ஸி மற்றும் ஆயிஷா மூவரும் அதிரடியாக கீழே தள்ளப்பட்டு இருப்பது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது. மேலும், இந்த வாரம் எவிக்ட் ஆகும் இடத்தில் இருக்கும் போட்டியாளர் யார் என்பது தான் இதில் ஆச்சர்யமான விஷயமே..

தனலட்சுமி எவிக்ட் ஆகிறாரா
இந்த வாரம் அதிரடியாக கீழே இறங்கிய நிலையில், கடைசி இடத்திற்கே வந்து விழுந்து விட்டார் தனலட்சுமி. நிவாஷினி வெளியேறுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த வாரம் தனலட்சுமி தான் வெளியேற போகிறாரா என்கிற ஷாக் சோஷியல் மீடியாவில் எதிரொலித்து வருகிறது. ஆயிஷாவுக்கும் தனலட்சுமிக்கும் நூல் அளவு தான் வோட்டிங்கில் வித்தியாசம் இருப்பதால் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் லீக் ஆகிவிடும்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான சூட்டிங் இவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் சூட்டிங் முடிந்த உடனே அதிகாரப்பூர்வமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் எவிக்ட் ஆனார்கள் என்பது தெரிந்து விடும். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சொல்லி வருவது இந்த வாரம் தான் பொருந்துகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











