ஆயிஷாவின் டிரஸ்ஸை பாராட்டிய பிக்பாஸ்… அப்ப நாங்கல்லாம்.. பொறாமையால் துடித்த தனலட்சுமி

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 43வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதல் வாரத்தில் இருந்தே தனலட்சுமி ஏதாவது சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கமாகி விட்டது.

இந்நிலையில், இன்றைய டாஸ்க்கில் ஆயிஷாவுக்கு யதார்த்தமாக கிடைத்த பாராட்டுக்கு தனலட்சுமி ரியாக்‌ஷன் செய்ததை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் 43வது நாள்

பிக் பாஸ் 43வது நாள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்த வாரத்தில் 15 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரத்துக்கான தலைவர் பதவியில் மைனா நந்தினி வெற்றிப் பெற்றதால், தோல்வியடைந்த தனலட்சுமி காலையிலேயே தனது வேலையை காட்டத் தொடங்கிவிட்டார்.

ஆயிஷாவுக்கு பிக் பாஸ் பாராட்டு

ஆயிஷாவுக்கு பிக் பாஸ் பாராட்டு

முதல் வாரத்தில் இருந்தே எதாவது சர்ச்சைகளில் சிக்குவதுடன், சக போட்டியாளர்களுடன் சண்டை போடுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார் தனலட்சமி. முக்கியமாக பேக்டரி டாஸ்க்கில் அவர் நடந்து கொண்டவிதம், பலரது கண்டனத்தையும் பெற்றது. சென்ற வாரம் ராஜா ராணி டாஸ்க்கில் மட்டுமே கொஞ்சம் அடக்கி வாசித்தார். இந்நிலையில், இந்த வாரம் தலைவராக மைனா நந்தினி தேர்வானதும் புதிய டாஸ்க்கில் விளையாட போட்டியாளர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக அனைவரும் லிவிங் ஏரியாவில் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது ஆயிஷாவை பிக் பாஸ் பாராட்டினார்.

தனலட்சுமி பொறாமை

தனலட்சுமி பொறாமை

பிக் பாஸின் இந்த வார டாஸ்க் என்ன என்று தெரிந்துகொள்வதற்காக லிவிங் ஹாலில் எல்லாரும் ஒன்று கூடினர். அப்போது ஆயிஷா குளித்து முடித்துவிட்டு தலையில் டவல் கட்டிக்கொண்டு ஸ்லீஸ்லெஸ் கவுனுடன் அமர்ந்திருந்தார். இதனைப் பார்த்த பிக் பாஸ், "ஆயிஷா... நைஸ் ட்ரெஸ்" என பாராட்டினார். இதனை கேட்ட ஆயிஷா வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி சிரிக்க, தனலட்சுமியின் முகமோ பொறாமையால் வெந்து தணிந்தது. அதோடு "அப்ப நாங்கல்லாம் நல்லா இல்லையா, எங்க ட்ரெஸ்..." என இழுத்தார்.

நெட்டிசன்கள் ட்ரோல்

நெட்டிசன்கள் ட்ரோல்

ஆயிஷாவை மிக எதார்த்தமாகவே பிக் பாஸ் கிண்டல் செய்து பாராட்டினார். ஆனால், அதை புரிந்துகொள்ளாத தனலட்சுமி பொறாமை ஆனதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ தனலட்சுமியும் அதை கிண்டலுக்காகவே சொல்லி இருக்கலாமே என அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இன்றைய முதல் இரண்டு ப்ரோமோக்களிலும் தனலட்சுமியின் நடவடிக்கைகள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இப்போது ஆயிஷாவின் ட்ரஸ்ஸை பிக் பாஸ் பாராட்டியதுக்கு அவர் ரியாக்ட் செய்ததும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X