twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கமல் எனக்கு திருட்டு பட்டம் கட்டுகிறார்' ஆயிஷாவிடம் சொன்ன தனலட்சுமி..கடைசிவரை தவறை உணரவே மாட்டாரா?

    |

    கமல்ஹாசன், ஸ்வீட் கடை டாஸ்க்கில் தனலட்சுமி செய்த மோசடியை அம்பலப்படுத்தினார்.

    ஏமாற்றுவது, மோசடி செய்வது அவமானகரமான செயல், இது பிக் பாஸ் வீட்டில் இருப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று கமல் கூறினார்.

    பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சிறிய தவறு, வெளியே பார்த்துக்கொண்டிருக்கும் பத்தாயிரக்கணக்கானவர்களிடம் தொற்றிக் கொள்ளும் என்று கடுமையாக கண்டித்தார்.

    Bigg Boss Tamil 6: குறும்படம் போட்டு ஷெரினா அவுட்.. அப்போ அடுத்த வாரம் தனலட்சுமி தான் எவிக்டா? Bigg Boss Tamil 6: குறும்படம் போட்டு ஷெரினா அவுட்.. அப்போ அடுத்த வாரம் தனலட்சுமி தான் எவிக்டா?

     உளவியலை, வாழ்வியலை பிரதிபலிக்கும் பிக்பாஸ் வீடு

    உளவியலை, வாழ்வியலை பிரதிபலிக்கும் பிக்பாஸ் வீடு

    பிக் பாஸ் வீடு பொதுவாக உளவியல் ரீதியான ஒரு பாடசாலை என்று நாம் அடிக்கடி எழுதி வருகிறோம். அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் ஹவுஸ் மேட்ஸ்கள் நடந்து வருவதையும் பார்க்கிறோம். நன்றாக பழகுவது சமயம் கிடைத்தால் முதுகில் குத்துவது, முகத்திற்கு நேராக ஒன்று பேசுவது முதுகுக்கு பின்னால் ஒன்று பேசுவது, நட்புடன் பழகி காலை வாருவது, போலித்தனமான உறவு, போலித்தனமான புகழ்ச்சி, தேவையில்லாமல் ஒருவரை குற்றவாளியாக்குவது என பலவித கலவைகளை பல சீசன்களில் பார்த்து வருகிறோம். இந்த சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல.

     மோசடி செய்து ஜெயித்த தனா&கோ-துகிலுரித்த கமல்

    மோசடி செய்து ஜெயித்த தனா&கோ-துகிலுரித்த கமல்

    கடந்த வாரம் ஸ்வீட் கடை டாஸ்க்கில் தனலட்சுமி&கோ நேர்மையற்ற முறையில் விளையாடி, கல்லாப்பெட்டியில் பணத்தை வைக்காமல் கண்ட இடத்தில் ஒளித்து வைத்துக்கொண்டு, கணக்கையும் சரியாக ஒப்படைக்காமல் பொய் கணக்கு கூறி மோசடியான வகையில் டாஸ்கை ஜெயித்தார்கள். அதை கொண்டாடியும் வந்தனர். டாஸ்க் ஜெயித்ததால் தனலட்சுமி எவிக்சன் ப்ராசஸில் இருந்து தப்பினார். இதனால் விக்ரமன் எதுவும் சொல்ல இயலாத நிலையில் இருந்தார். டாஸ்கில் மோசடி செய்து தனலட்சுமி மட்டும் வெல்லவில்லை, டீமில் இருந்த மற்றவர்களும் மோசடிக்கு துணை போனதை கமல்ஹாசன் நேற்று தோலுரித்தார். நல்லவர் போல் வேஷம் கொண்டிருந்த ரச்சிதாவின் முகமுடியும் கிழிந்தது. அவர் கமலிடம் சங்கடப்பட்டு சமாளிக்க முயன்றார்.

     தனலட்சுமியை கடுமையாக கண்டித்த கமல்

    தனலட்சுமியை கடுமையாக கண்டித்த கமல்

    இதற்கிடையே தனலட்சுமியை கமல்ஹாசன் கடுமையாக கண்டித்தார். நியாயமான விஷயங்களுக்கு கண்ணீர் சிந்தினால் முதலில் துடைப்பவனாக நான் வருவேன். ஆனால் நேர்மையற்ற முறையில் செயல்பட்டு தவறு செய்து கண்ணீர் சிந்தினால் நான் கண்டுகொள்ள மாட்டேன் என்று கமல் காட்டமாக கூறினார். தனலட்சுமி போன்றவர்கள் செயலை நான் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அதனால் தான் இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன் தனலட்சுமியை ஒரு கருவியாக வைத்து இந்த மோசடியை நான் வெளியுலகத்திற்கு ஒரு பாடமாக சொல்கிறேன் என்று கமல் தெரிவித்தார்.

    எனக்கு திருட்டுப்பட்டம் கட்டிட்டாரு கமல்..இப்பவும் தவறை உணராத தனலட்சுமி

    எனக்கு திருட்டுப்பட்டம் கட்டிட்டாரு கமல்..இப்பவும் தவறை உணராத தனலட்சுமி

    கமலின் கடுமையான கோபத்துக்கு முன்னால் தனலட்சுமி எதுவும் பேச முடியாமல் பாத்ரூம் சென்று கதறி அழுதார். அப்போது ஆறுதல் கூறிய ஆயிஷாவிடம் எனக்கு திருட்டு பட்டம் கட்டி விட்டார் என்று தனலட்சுமி அழுதபடி கூறினார். "திருட்டுப்பட்டம் கட்டவில்லை விதியை மீறினேன்னுதான் சுட்டிக்காட்டினார்கள்", என ஆயிஷா சொன்னார். "இது எனக்கு பெரிய விஷயமாகவே தெரியல"ன்னு மீண்டும் தனலட்சுமி கூறினார். அப்பொழுதும் கூட தான் தவறு செய்யவில்லை என்கிற மனநிலையில், தான் மோசடி செய்ததை மறந்து விட்டு கமல் ஏதோ திருட்டு பட்டம் கட்டியது போல் பேசியது அவர் செய்த தவறை உணரவில்லை என்பதையே காட்டியது.

     நான் என்ன செஞ்சிட்டேன்னு இத்தனை பெரிசாக்கிட்டாங்க-தனலட்சுமி

    நான் என்ன செஞ்சிட்டேன்னு இத்தனை பெரிசாக்கிட்டாங்க-தனலட்சுமி

    நிகழ்ச்சி முடிந்த பின்னர் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட தனலட்சுமி நைசாக ஒவ்வொரு ஹவுஸ் மேட்ஸ்சோடும் பேசிக்கொண்டு நான் நியாயமாக தான் நடந்தேன் என்று தன் தரப்பு நியாயத்தை சொல்லிக் கொண்டிருந்தார். மணிகண்டன், குயின்சி உள்ளிட்டோர் உடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது "நான் என்ன செஞ்சிட்டேன்னு இவ்வளவு பெருசா ஆக்கிட்டாங்க ஒரு சின்ன விஷயம் கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தை வெளியே எடுத்துட்டு மறுபடியும் வச்சேன் இதை போய் பெரிய தவறு என்கிறார்களே" என்று தான் செய்த மோசடியை வெகு சாதாரணமான ஒரு விஷயம் போல் பேசினார். அவர் இன்னும் தவறை உணரவில்லை என்பதையே அது காட்டியது.

     தானலட்சுமியிடம் கதிரவன் அளந்துவிட்ட இன்கம்டாக்ஸ் ரெய்டு கப்சா

    தானலட்சுமியிடம் கதிரவன் அளந்துவிட்ட இன்கம்டாக்ஸ் ரெய்டு கப்சா

    அதன் பின்னர் பேசிய தனலட்சுமி, "கதிரிடம் நான் பேசினேன் அவர் சொன்னார் இதுபோன்று வியாபாரம் செய்பவர்கள் இன்கம்டாக்ஸ் ஆபீசிலிருந்து வந்து செக் பண்ணும்போது பணத்தை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு அவர்கள் போனவுடன் மீண்டும் அதே இடத்தில் வைப்பார்கள் என்று சொன்னார்" என்று கூறி இது சாதாரண விஷயம் தானே என்றவாறு அவர் தன் செயலை நியாயப்படுத்தினார். ஒரு விளையாட்டில் மோசடியாக நடந்து ஜெயிப்பதும், நேர்மையாக நடக்கும் ஒருவருடைய வாய்ப்பை பறித்ததும், 64 கேமரா இருந்த பொழுதும் மோசடித்தனத்தை கும்பலாக சேர்ந்து அரங்கேற்றிவிட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் நடந்தும், பின்னர் குறும்படம் மூலம் சிக்கி கமல்ஹாசன் கண்டித்த பின் கண்ணீர் விட்டு அழுகை நாடகம் நடத்தி அதுவும் செல்லாது போனவுடன் தவறே செய்யாதது போல் இருப்பது அவர் இன்னும் திருந்தவில்லை என்பதை காட்டுகிறது.

     அடிப்படை ஞானம் இல்லாத பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

    அடிப்படை ஞானம் இல்லாத பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

    இந்த வாரம் எவிக்சன் ப்ராசஸில் தனலட்சுமி வந்தால் நிச்சயம் அவர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. தவறை உணராத ஒருவர் பெரிய சிக்கலில் சிக்குவார் என்பதற்கு தனலட்சுமி உதாரணம். மற்றொருபுறம் இதுபோன்ற தவறுகளை பார்க்கும் ஹவுஸ்மேட்ஸ்கள் மந்த புத்தியுடன் இருப்பதும், எதைப் பற்றியும் கேட்காமல் எனக்கு என்ன என்கிற பாணியில் இருப்பதும், இவர்கள் எவ்வளவு பெரிய மிக்சர் பார்ட்டிகள் என்பதை உணர்த்துகிறது. கதிரவன் போன்ற ஆட்கள் இன்கம்டாக்ஸ் ரைடு குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் தனக்கு தோன்றியதை தனலட்சுமியிடம் அளந்து விட்டு சென்றதையும் பார்க்க முடிந்தது. இவ்வளவுதான் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் அறிவு என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    English summary
    Kamal Haasan exposed Dhanalakshmi's cheating in the sweet shop task. Kamal said that cheating, Fraud is shameful and they will not allow it in the Bigg Boss house. He vehemently condemned that a small mistake in the Bigg Boss house would infect the tens of thousands watching outside.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X