என்னா நடிப்புடா சாமி.. வெளியில் போகணும்.. அம்மா கிட்ட பேசணும்.. ஜிபி முத்து ரோலை எடுத்த தனலட்சுமி!
சென்னை: பிக் பாஸ் இனிமேல் வீட்டுக்குப் போகணும்னு சொல்லவே மாட்டேன் என கேமராவுக்கு முன் தரையில் விழுந்து நடித்த தனலட்சுமி, ரெண்டே பேர் சக்கரை தண்ணி கொடுத்ததும் அம்மா கிட்ட பேசணும், வீட்டுக்குப் போகணும்னு சொல்வதை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்த வாரம் தனலட்சுமியை இன்விஸிபிளாக மாறிவிடுங்கள் என பிக் பாஸ் சொன்னதும் அவருக்கு ஜனனிக்கும் இடையே சண்டை வெடித்தது.
பின்னர், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போக போகிறேன் என தனலட்சுமி அழுது ஆர்ப்பாட்டம் செய்தது ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பேச்சை மாற்றி
வீட்டிலேயே இப்படித்தான் எங்கம்மா ஏதாவது சொல்லிட்டாங்கன்னா வீட்டை விட்டு கிளம்புறேன் என அழுது அடம்பிடிப்பேன். அதே போலத்தான் இங்கேயும் பண்ணிட்டேன். இனிமே அப்படி செய்ய மாட்டேன் என்னை மன்னித்து விடுங்க பிக் பாஸ் என தனலட்சுமி பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். ஆனால், சனிக்கிழமை எபிசோடில் தனலட்சுமி மீண்டும் வீட்டுக்குப் போறேன் என அடம்பிடித்தார்.

ஆடியன்ஸ் பல்ஸ்
ப்ளீஸ் பிக் பாஸ் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இதையெல்லாம் டெலிகாஸ்ட் பண்ணாதீங்க, நான் இனிமே நீங்க கொடுக்கிற டாஸ்க்கை எல்லாம் சரியாக செய்கிறேன். எந்த பிரச்சனைக்கும் போக மாட்டேன் என பேசிய தனலட்சுமி ரெண்டே பேர் சர்க்கரை தண்ணியை கொடுக்கும் போது ரசிகர்கள் பலத்த கைதட்டல்களை தட்டிய நிலையில், அதை புரிந்து கொண்டார்.

பெயர் டேமேஜ்
தனலட்சுமியின் இந்த டிராமாவை பார்த்த ரசிகர்கள் ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதும்மா? இந்த வாரம் மிஸ் ஆனாலும், அடுத்த வாரம் கண்டிப்பா நாமினேஷனில் வா? நாங்களே வீட்டுக்கு அனுப்புறோம் என்கிற ரீதியில் கைதட்டியதை புரிந்து கொண்டு தனலட்சுமி தனது பெயர் வெளியே கெட்டுப் போய் விட்டது என நினைத்து மீண்டும் கேமரா முன்னாடி நின்று அம்மாவிடம் பேச வேண்டும் என்றும் வீட்டுக்குப் போறேன் என்றும் அழுதார்.

ஜிபி முத்துவை போல
ஜிபி முத்து சாப்பிடாமல் கொள்ளாமல் மகன் நினைவாகவே இருந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி விட்டார். ஜிபி முத்து போனதை போலவே நாமளும் போய் விட வேண்டும் என ஆயிஷா கடந்த வாரம் அழுதும் போகவில்லை. இந்த வாரம் கமலிடம் ஸாரி சொல்லிட்டு சகஜமாக விளையாடி வருகிறார். இந்நிலையில், தனலட்சுமி அடுத்த ஜிபி முத்துவாக மாறிவிட்டார்.


Click it and Unblock the Notifications











