twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    1000 கோடிகள் வசூல் செய்யும் பொன்னியின் செல்வன் 2... தயாரிப்பாளர் தனஞ்செயன் உறுதி

    |

    சென்னை: வசூல் ரீதியாக பல பிரமாண்டமான சாதனைகளை புரிந்து வருகிறது பொன்னியின் செல்வன் 1 திரைப்படம்.

    உலக அளவில் இந்தப் படம் 300 கோடிகளை தாண்டி வசூல் செய்து கொண்டிருப்பதாக லைகா நிறுவனம் முறையாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இந்தப் படம் குறித்தும் நானே வருவான் திரைப்படம் குறித்தும் பல உண்மை நிலவரங்களை பகிர்ந்துள்ளார்.

    பொன்னியின் செல்வன் பாகுபலி ஒப்பீடு... தெலுங்கு ரசிகர்களின் வன்மம் குறித்து கமல்பொன்னியின் செல்வன் பாகுபலி ஒப்பீடு... தெலுங்கு ரசிகர்களின் வன்மம் குறித்து கமல்

    பல கதாநாயகர்கள்

    பல கதாநாயகர்கள்

    சமீப காலமாக பெரிய நடிகர்கள் கூட தனியாக நடித்து வரும் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை. அதுவே பல ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள் ஓடுகிறது. மல்ட்டி ஸ்டாரர் படம் எடுத்தால்தான் மிகப்பெரிய வெற்றி பெறுமா என்று தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, அப்படி சொல்லிவிட முடியாது. உதாரணத்திற்கு திருச்சிற்றம்பலம் மிகவும் குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ஆனால் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. கண்டிப்பாக நிறைய கதாநாயகர்கள் நடிக்கும் பொழுது வெற்றி பெறும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

    விக்ரம்

    விக்ரம்

    உதாரணத்திற்கு இதற்கு முன்னர் மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தில் லெஜென்டரி கமலஹாசன் அவர்களை தவிர்த்து தெலுங்கு படங்களிலும் நடித்து அங்கு பிரபலமாகி இருக்கும் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இருந்தார்கள். கேரளாவைப் பொருத்தவரை ஃபகத் பாசில் இருந்தார். அதனால்தான் அந்தப் படத்தால் மிகப் பெரிய வசூலை எடுக்க முடிந்தது. இப்போது அதே நிலைதான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என்று பல நடிகர்கள் இருப்பதால் ஒவ்வொருவருடைய ரசிகர்களும் திரையரங்கிற்கு வந்து பார்ப்பார்கள் என்று கூறி இருக்கிறார்.

    நானே வருவேன்

    நானே வருவேன்

    நானே வருவேன் திரைப்படம் தோல்வி படம் என்கிறார்களே அது பற்றிய கருத்து என்ற கேள்விக்கு, அதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். நானே வருவேன் திரைப்படம் மிக மிக குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். தனுஷிற்கு இருக்கும் பிசினஸிற்கு சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் தளங்களில் மட்டுமே லாபம் பார்த்துவிட்டார் தாணு. இப்போது திரையரங்கில் சம்பாதிப்பது மேற்கொண்டு, ஹிந்தி டப்பிங், தெலுங்கு டப்பிங், வட இந்தியாவில் சம்பாதிப்பது என்று அனைத்துமே தயாரிப்பாளர் தாணுவிற்கு கிடைக்கும் லாபம். அந்தப் படம் எடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்கு அது வசூல் செய்து கொண்டிருப்பது மிகப்பெரிய வெற்றி என்று தான் கூற வேண்டும்.

    பொன்னியின் செல்வன் 1000 கோடிகள்

    பொன்னியின் செல்வன் 1000 கோடிகள்

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பொருத்தவரை வழக்கமாக தமிழ்ப் படங்கள் வெளிநாடுகளில் 100 கோடி வசூல் புரிந்திருக்கிறது. ஆனால் அந்தப் படங்கள் மொத்தமாக ஓடிய பிறகுதான் அது சாத்தியமானது. முதன் முறையாக ஒரே வாரத்தில் ஒரு திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் 125 கோடி வசூல் செய்திருக்கிறது என்றால் அது பொன்னியின் செல்வன் தான். அதேபோல ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் சாதனை என்கிற பெருமையும் அந்தப் படத்திற்குத்தான். என்னுடைய கணிப்புப்படி இரண்டு அல்லது மூன்று வாரம் முடிவில் இந்தப் படம் 600 கோடிகள் வசூல் செய்யும். விக்ரம் மற்றும் 2.0 படத்தின் சாதனைகளை இந்த படம் முறியடிக்குமா என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை இலக்காக வைத்து பொன்னியின் செல்வன் இரண்டை வெளியிட்டால் கண்டிப்பாக ஆயிரம் கோடிகள் அந்தப் படம் வசூல் செய்யும் என்பது என்னுடைய கணிப்பு என்று தனஞ்செயன் பல புள்ளி விவரங்களை கூறியிருக்கிறார்.

    English summary
    Ponniyin's Selvan 1 has achieved many huge achievements at the box office. Lyca has formally announced that the film has collected more than 300 crores worldwide.In this case, producer Dhananjayan has shared many facts about this film and the film Naanae Varuvean.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X