»   »  'மெர்சல் படத்துக்கு கவலைப்பட்டவங்க இதை கண்டுக்கவே இல்ல..' - தன்ஷிகா பரபரப்பு பேச்சு!

'மெர்சல் படத்துக்கு கவலைப்பட்டவங்க இதை கண்டுக்கவே இல்ல..' - தன்ஷிகா பரபரப்பு பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகை தன்ஷிகா பரபரப்பு பேச்சு!- வீடியோ

சென்னை : கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா நடிப்பில் எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கிய 'விழித்திரு' படம் பல சிக்கல்களுக்கிடையே சமீபத்தில் வெளிவந்தது.

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றாலும், தியேட்டர்கள் அதிகம் கிடைக்காததால் படம் சரியாகப் போகவில்லை. ரசிகர்களால் கவனிக்கப்படுவதற்கு முன்பே சில தியேட்டர்களில் எடுக்கப்பட்டும் விட்டது.

இந்நிலையில், 'விழித்திரு' படம் பற்றிய திறனாய்வுக் கூட்டம் மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடந்துது. இதில் படத்தின் நாயகி தன்ஷிகா கலந்து கொண்டு பேசினார்.

பேசக்கூட முடியவில்லை

பேசக்கூட முடியவில்லை

சமுதயாத்தில் உள்ள அனைவருக்கும் சமூக உணர்வு உண்டு. அந்த சமூக உணர்வு எனக்கும் உண்டு. ஒரு படத்தின் வெற்றியில் கலந்து கொள்வதைவிட வேதனையில் கலந்து கொள்வதையே பெருமையாக நினைக்கிறேன். என் மனது பாரமாக இருக்கிறது. என்னால் பேசக்கூட முடியவில்லை. ஒரு இயக்குனரின் ஐந்து வருடப் போராட்டம் இந்தப் படம்.

வெற்றியும் தோல்வியும்

வெற்றியும் தோல்வியும்

இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதற்கு நன்றி சொன்னார்கள். திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது நடிகர், நடிகைகளின் கடமை. அப்படி கலந்து கொள்ளும்போதுதான் தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரியும். நான் வெற்றியை விட தோல்வியை அதிகம் பார்த்தவள். ஆனால் இரண்டையும் சமமாகப் பார்க்க பழகிக் கொண்டேன்.

தலையில் தூக்கி வைக்கவில்லை

தலையில் தூக்கி வைக்கவில்லை

'கபாலி' வெற்றியின் போதும் நான் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவில்லை. அதன் பிறகு தோல்விப் படங்களில் நடித்தபோதும் தலைகவிழ்ந்து இருக்கவில்லை. ஒரு தமிழ்ப் பெண் சினிமாவில் வளர்வது இந்தச் சமூகத்தில் மிகவும் கடினம். ஆனால் நான் போராடி வந்து கொண்டிருக்கிறேன்.

விழித்திரு பிரச்னை

விழித்திரு பிரச்னை

'விழித்திரு' படத்துக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. படம் நன்றாக இருந்தும் பேசப்பட்டும் படம் சரியாக போகவில்லை. இது எனக்கு முதல் அனுபவம் இல்லை. இதற்கு முந்தைய 'உரு' படமும் நன்றாக இருந்தும் சரியாகப் போகவில்லை. 'விழித்திரு' படம் முன்பே வெளிவந்திருக்க வேண்டியது. தயாரிப்பாளர் சங்கப் போராட்ட அறிவிப்பால் வெளிவர முடியவில்லை.

பணம் இருந்தால்தான் சாதிக்கமுடியுமா

பணம் இருந்தால்தான் சாதிக்கமுடியுமா

அதன் பிறகு வந்த மெர்சல் படத்துக்கு திரையுலகமே உதவி செய்தது. 'விழித்திரு' படம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியில்லை. பணம் இருப்பவர்களால் இங்கு எதையும் சாதிக்க முடியும் என்பதையே இது உணர்த்துகிறது.

மார்க்கெட் உயரவில்லை

மார்க்கெட் உயரவில்லை

கபாலி படத்தால் என் மார்க்கெட் உயரவில்லை. எனக்கான மார்க்கெட் என்னவோ அதுதான் இருக்கிறது. 'கபாலி' படத்துக்காக முடியை வெட்டினேன். பெரிய படம், ரஜினி சாருடன் நடிப்பதால் அப்படிச் செய்தேன். சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த பெண்களும் வெட்டினார்கள். காரணம் அவர்களுக்கு சினிமா மேல் இருக்கும் பக்தி.

English summary
'Vizhithiru' film directed by Meera Kathiravan has recently come out of many issues andand the film is not going well because theaters are not available . Dhansika, heroine of this film talked about 'Vizhithiru'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil