»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக பிரமுகரும், கமல்ஹாசன் நடிக்கும் ஆளவந்தான் படத் தயாரிப்பாளருமானகலைப்புலி தாணுவின் மனைவி கலாவதி சிங்கப்பூரில் மரணமடைந்தார்.

கலாவதி (வயது 45) உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் உள்ளமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நலைபுதன்கிழமை நள்ளிரவுக்கு மேல் மோசமடைந்தது. இரவு 1 மணியளவில் சிகிச்சைபலனின்றி அவர் இறந்தார்.

கலாவதியின் உடல் சென்னைக்கு விமானம் மூலம் வியாழக்கிழமை இரவு கொண்டுவரப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம்செய்யப்படுகிறது.

கலாவதிக்கு, பரந்தாமன், பிரபு, கவிதா ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்களில்கவிதாவுக்கு மட்டும் திருமணமாகியுள்ளது.

Read more about: actor, actress, dhanu, movies, producer

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil