For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிம்பு – தனுஷ் இரு துருவங்கள் இணையும் புதிய படம்..யாருப்பா அந்த டைரக்டர்?

  |

  சென்னை: தமிழ்த் திரையுலகில் தனுஷும் சிம்புவும் எதிரெதிர் துருவங்களில் பயணித்து வருகின்றனர்.

  சிம்பு, தனுஷ் இருவருக்குமே இங்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், இரு தரப்புக்கும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி மோதல்கள் நடக்கும்.

  இந்நிலையில், ரசிகர்களின் மோதலுக்கு சிம்புவும் தனுஷும் சேர்ந்து ஒரு முடிவுக்கட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஷூட்டிங் ஸ்பாட்டில் தாய்ப்பால் கொடுத்த தனுஷ் பட நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்! ஷூட்டிங் ஸ்பாட்டில் தாய்ப்பால் கொடுத்த தனுஷ் பட நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்!

  ஆத்மனும் அசுரனும்

  ஆத்மனும் அசுரனும்

  கை குழந்தையாக இருக்கும் போதே தந்தை டிஆர் ராஜேந்திரனின் இயக்கத்தில் திரையில் முகம் காட்டியவர் சிம்பு. சின்ன வயதில் இருந்தே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு விரல் வித்தைகள் காட்டி வந்த அவர், இப்போதெல்லாம் ரொம்பவே அடக்கி வாசிக்கத் தொடங்கிவிட்டார். அதேபோல், தனுஷும் தனது விடலைப் பருவத்தில் 'துள்ளுவதோ இளமை' படம் மூலம் அறிமுகமாகி, இன்று நடிப்பு அசுரனாக ஜொலித்து வருகிறார். இருவருமே திறமையான நடிகர்களாக இருந்த போதும், எப்போதுமே கொஞ்சம் விலகியே பயணித்து வருகின்றனர். அதனால், ரசிகர்களுக்குள்ளும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.

  சிம்பு - தனுஷ் காம்போ?

  சிம்பு - தனுஷ் காம்போ?

  சிம்பு - தனுஷ் இருவருமே தங்களது படங்களில் பஞ்ச் வசனங்கள் மூலம் ஒருவரையொருவர் வம்பிழுத்து வந்தனர். சமீபத்தில் கூட தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரே மேனில் நடித்தது குறித்து ஜாடைமாடையாக கமெண்ட் அடித்தார் சிம்பு. எங்கேயாவது திடீரென பார்த்துக்கொண்டால் நண்பர்கள் போல காட்டிக்கொள்கின்றனர். ஆனால், உள்ளுக்குள் எப்போதுமே வைப்ரேஷன் மோடில் தான் இருக்கின்றனர். இந்நிலையில், தனுஷ் - சிம்பு இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகியுள்ளது.

  யாருப்பா அந்த டைரக்டர்

  யாருப்பா அந்த டைரக்டர்

  சிம்புவையும் தனுஷையும் ஒன்றாக நிற்க வைத்து போட்டோ எடுப்பதே முடியாத காரியம். அப்படி இருக்க இருவரையும் வைத்து யார் படம் இயக்கப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த லிஸ்ட்டில், நெல்சன், விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், அட்லீ ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஆனால், தனுஷ் - சிம்பு இருவரும் கண்டிப்பாக இணைகிறார்கள் என கோலிவுட் பச்சிகள் அடித்து சொல்கின்றன. இதுவரை இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்கள் பட்டியலில் இவர்கள் மட்டுமே மிச்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  காலம் மாறிப்போச்சு

  காலம் மாறிப்போச்சு

  தமிழ்த் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரங்களான எம்ஜிஆரும் சிவாஜியும் 'கூண்டுக்கிளி" படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு ரஜினி, கமல் இணை பல படங்களில் மாஸ் காட்டினர். ஆனால், தற்போது அவர்கள் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், விஜய் - அஜித் இருவரும் டாப் ரேங்க் எடுக்கும் முன்னரே 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும், விஜய் - சூர்யா, விக்ரம் - சூர்யா, விஷால் - ஆர்யா, விஜய் - விஜய் சேதுபதி, கமல் - விஜய் சேதுபதி - ஃபஹத் பாசில் - சூர்யா, இப்போது பொன்னியின் செல்வனில் விக்ரம் - கார்த்தி - ஜெயம் ரவி என மல்டி ஸ்டார் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதனால், சிம்புவும் தனுஷும் இணைந்தால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இது எப்படி சாத்தியம் ஆகப்போகிறது என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

  English summary
  Dhanush and Simbu are traveling as opposites in Tamil cinema. In this case, it has been reported that both of them will act in a film together. This information has raised expectations among the fans and sparked a debate as to who the director will be.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X