»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸும் வாங்கிக் கொண்டு நடிக்க மறுத்ததால் வடிவேலுவுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

இதேபோல, ட்ரீம்ஸ் படத்தை தனுஷ் முடித்துக் கொடுக்காமல், சுள்ளான் படத்தை திரையிட விடுவதில்லை என்று அவருக்கும் தடை விதிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

மறைந்த படத் தயாப்பாளர் ஜீ.வியின் படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு ரூ. 2 லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். ஜீ.வி. மறைவினால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தருமாறு வடிவேலுவை ஜீ.வி. குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்.

இந்தா தர்றேன், அந்தா தர்றேன் என்று இழுத்தடித்த வடிவேலு கடைசி வரை பணத்தைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நொந்து போன ஜீ.வி. குடும்பத்தினர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதேபோல, மதனகோபால் என்ற தயாப்பாளரிடம் வடிவேலு ரூ. 1 லட்சம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது. அவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

இரு புகார்களையும் விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முன் தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று வடிவேலுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய படங்களில் வடிவேலு நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல,நநிடிகர் தனுஷ் நடித்துள்ள சுள்ளான் படத்தை தடை செய்யவும் சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ட்ரீம்ஸ் படத்தில் நடிப்பதாக கூறி விட்டு பின்னர் மறுத்ததால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை அணுகினர்.

பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இந் நிலையில் பாலு மகேந்திராவின் ஒரு கனாக்காலம், தேவதையைக் கண்டேன் என சில படங்களில் புக் ஆன தனுஷ் அவற்றை ஒதுக்கி விட்டு சுள்ளான் படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். தற்போது படம் முடிவடைந்து ரிலீஸுக்கும் தயாராகி விட்டது.

ஆனால், சமரச திட்டத்தில் ஒப்புக் கொண்டபடி ட்ரீம்ஸ் படத்தில் நடித்து முடித்து விட்டுத்தான் தனுசின் சுள்ளான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ட்ரீம்ஸ் தயாரிப்பாளர்கள் தற்போது தனுஷை நெருக்கி வருகின்றனர்.

இதற்கு தனுஷ் ஒப்புக் கொள்ளாவிட்டால் அவரது படத்திற்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்தின் உதவியை நாடப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil