»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

இன்று நடக்கும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா- -நடிகர் தனுஷ் திருமண வரவேற்பில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்கிறார்.

திருமணம் நேற்று முன்தினம் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் நடந்தது. இந் நிலையில் திருமண வரவேற்பு இன்றுகாலை சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடந்தது.

இது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக நடந்த வரவேற்பாகும். இன்று மாலை விஐபிக்கள், திரையுலகினருக்காக வரவேற்புநிகழ்ச்சி நடைபெறுகிறது.

உறவினர்கள், நண்பர்களுக்கு மஞ்சள் நிறத்திலும், மற்றவர்களுக்கு சிவப்பு நிறத்திலும் வரவேற்பு அழைப்பிதழ்விநியோகிக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை 11.30 மணிக்கு தனுசும், ஐஸ்வர்யாவும் மண்டபத்துக்கு வந்தனர். ரஜினிகாந்த் 12 மணிக்கு வந்தார். புதுமணத்தம்பதிகள் இருவரும் பட்டுத் துணி உடுத்தியிருந்தனர்.

பெங்களூரில் இருந்து ரஜினிகாந்த் உறவினர்களும், தேனி மாவட்டம் மல்லிங்காபுரத்தில் இருந்து தனுஷ் உறவினர்களும்வந்திருந்தனர்.

வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியாதன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் விஜய் மனைவி சங்கீதா, தயாரிப்பாளர் பஞ்சுஅருணாசலம் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

பகல் 1 மணிக்கு உணவு பரிமாறப்பட்டது. வெஜிடபிள் பிரியாணி, போண்டா, சாதம், பொறியல், லட்டு, ரசம், சாம்பார், ஐஸ்கிரீம்என 22 வகை உணவுகள் பரிமாற்றப்பட்டன. மண்டபத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

திமுக தலைவர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள்மற்றும் தயாரிப்பாளர்கள் இன்று மாலை நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil