»   »  அடம்பிடித்தே நினைத்ததை சாதித்த தனுஷ்?

அடம்பிடித்தே நினைத்ததை சாதித்த தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலா படத்தில் இளம் வயது ரஜினியாக தனுஷ் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டானாக நடித்து வரும் படம் காலா. படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில் காலா படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ்

தனுஷ்

காலா படத்தில் ரஜினி வயதான டானாக வருகிறார். ஆனால் பிளாஷ்பேக்கில் இளம் வயதுக்காரராக வருகிறார். இந்நிலையில் இளம் வயது ரஜினியாக தனுஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ரஞ்சித்

ரஞ்சித்

காலா படத்தில் தனக்கு கவுரவத் தோற்றம் தருமாறு தனுஷ் ரஞ்சித்திடம் கேட்டார். உங்களுக்காக கதையை மாற்ற முடியாது என்று கூறி தனுஷின் கோரிக்கையை நிராகரித்தார் ரஞ்சித்.

ரஜினி

ரஜினி

ரஞ்சித் நிராகரித்த நிலையிலும் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை ரஜினியே தனது மருமகனை பரிந்துரைத்திருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பவர் பாண்டி

பவர் பாண்டி

தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் இளம் வயது ராஜ்கிரணாக அவர் நடித்திருந்தார். தற்போது அதே ஸ்டைலில் இளம் வயது ரஜினியாக நடிக்க உள்ளாராம்.

English summary
Buzz is that Dhanush will act as young Rajini in the upcoming movie Kaala. It is noted that Dhanush is the producer of Kaala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil