தனுஷின் ஹாலிவுட் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா

By Siva

Recommended Video

Games Of Thrones: ஒரு சகாப்த்தம் முடிந்ததை பற்றி தனுஷ் சோகமான ட்வீட்- வீடியோ

மும்பை: தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டுள்ளார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று பாடியை காட்டி மிரட்டும் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்பால் ரசிகர்களை மிரட்டிவிட்டு வந்தவர் தனுஷ். இந்நிலையில் அவர் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

Dhanush, Aishwarya attend The Extraordinary Journey of the Fakir trailer launch

தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குநர் கெவின் ஸ்காட் கலந்து கொண்டு தனுஷின் திறமையை பாராட்டி பேசினார்.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷுடன் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டார். அவர்கள் இருவரையும் ஜோடியாக பார்த்ததில் தனுஷ் ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய தனஷ், தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

தனுஷ் நடிக்க வந்ததில் இருந்தே வெற்றியை பார்த்து வருகிறார் என்று இல்லை. வெற்றி, தோல்வியை கடந்து வந்து இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லர் சும்மா பரபரவென்று செல்கிறது. தனுஷின் நடிப்பு வழக்கம் போன்று அசத்தலாக உள்ளது. படம் நிச்சயம் ஹிட்டாகி தனுஷுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அந்த படத்தின் தமிழ் ட்ரெய்லர் வரும் 21ம் தேதி வெளியிடப்படும் என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டது. அப்பா இயக்குநராக இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோவாகிவிடலாம் போன்று என்று தனுஷை ஆரம்பத்தில் விமர்சித்தார்கள்.

இன்று அதே தனுஷ் உலக அளவில் பிரபலமாகியுள்ளார். நடிப்பு தவிர தயாரிப்பு, பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, படம் இயக்குவது என்று தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நடிகர் தனுஷை அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் ப. பாண்டி படத்திற்கு பிறகு இயக்குநர் தனுஷை பார்க்க முடியவில்லை. அவரை எப்பொழுது பார்ப்போம் என்று ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X