»   »  அடடே, தனுஷுக்கு திருமணமாகி அதற்குள் 12 ஆண்டுகள் ஆகிவிட்டதே

அடடே, தனுஷுக்கு திருமணமாகி அதற்குள் 12 ஆண்டுகள் ஆகிவிட்டதே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி இன்று தங்களின் 12வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

இவன் எல்லாம் ஒரு ஹீரோவா என்று தான் நடிக்க வந்த புதிதில் தன்னை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்ததாக தனுஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இன்று அந்த ரசிகர்களே வியந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்.

Dhanush, Aishwarya celebrate 12th wedding anniversary

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட தனுஷுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமண நாளையொட்டி தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் அக்கா ஐஸ்வர்யா, மாமா தனுஷுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

English summary
Multi talented actor Dhanush and equally talented Aishwarya are celebrating their 12th wedding anniversary on friday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil