»   »  இந்த விஷயத்தில் கணவர் தனுஷ் மாதிரியே யோசித்த ஐஸ்வர்யா

இந்த விஷயத்தில் கணவர் தனுஷ் மாதிரியே யோசித்த ஐஸ்வர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் ஒரே மாதிரியே யோசிக்கிறார்களே.

தனுஷ் தான் முதன்முதலாக இயக்கி வரும் பவர் பாண்டி படத்தில் பிசியாக உள்ளார். படங்களில் நடிக்கும் ஸ்டண்ட் பார்ட்டிகளின் வாழ்க்கைப் போராட்டம், வலியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் பவர் பாண்டி.

Dhanush, Aishwarya think alike

படத்தில் தனுஷும் ஸ்டண்ட் பார்ட்டியாக நடிக்கிறார். தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கி வரும் ஆவணப்படமான சினிமா வீரன் ஸ்டண்ட் பார்ட்டிகளின் வாழ்க்கையை பற்றியது தான்.

இந்த ஆவணப்படத்திற்கு வாய்ஸ் கொடுத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒரே நேரத்தில் கணவனும், மனைவியும் ஒரே விஷயம் பற்றி படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆவணப் படமும் சரி, பவர் பாண்டியும் சரி அடுத்த ஆண்டு ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush and his talented wife Aishwarya are working in different genres but on the same concept.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil