தனுஷ், ஐஸ்வர்யா.. காத்திருக்கும் செம ட்விஸ்ட்.. அப்போ அதேதானா?

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து மகிழ்ச்சியான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அனைவர் கண்படும் அளவிற்கு மனம்ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள் ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இது ரசிகர்களை மட்டுமல்லாது திரைப்பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விவாகரத்து அறிவிக்குப்பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் படு பிஸியானார்கள். இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை பிரிந்து தான் இருக்கிறார்கள். விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறினார். இருவரும் குழந்தைகளுக்காக அல்லது அப்பாவுக்காக சேர்த்துவிடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்.

சந்திக்கவில்லை

சந்திக்கவில்லை

பிரிவு அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம் பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, தனுஷ் மாறன் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியபோதும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.

பெயரை நீக்கினார்

பெயரை நீக்கினார்

தனுஷின் மாறன் திரைப்படம் வெளியான போது ஐஸ்வர்யா, மாறன் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் லைக் போட்டிருந்தார். அதே போல, பயணி ஆல்பம் வெளியான போது தனுஷ், ஐஸ்வர்யாவை தோழி என்று கூறி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதனால், கடுப்பான ஐஸ்வர்யா, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றினார்.

ரகசிய சந்திப்பு

ரகசிய சந்திப்பு

இதையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்துகொள்வதாக கிசுகிசு ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல பரவிவருகிறது. அதாவது, விவாகரத்துக்கு முன் இருவரும் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள். அந்த வீட்டில் இருவரும் அடிக்கடி சென்று வருவதாக கூறப்பட்டது. இருவரும் ரகசியமாக சந்தித்து வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்விகள் எழுந்தன.

Recommended Video

Annamalai | 90's Kids மனதை விட்டு நீங்கா படம், Rajinikanth | Kollywood | Filmibeat Tamil
மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இதையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து மகிழ்ச்சியான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜூலை 28 தேதி தனுஷின் பிறந்த நாளன்று இருவரும் இணைந்து பிறந்தநாளை கொண்டாட உள்ளதாகவும், குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று இருவரும் இணைந்துவிட்டோம் என்று அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இந்த செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X