தனுஷ்-ஐஸ்வர்யா ஏற்கனவே பிரிந்துதான் இருந்தனர்... என்ன காரணம்... நடந்தது என்ன ?

சென்னை : தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜனிகாந்த் பிரிந்திருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்றும் அவர்கள் ஏற்கனவே பிரிந்துதான் இருந்தார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரிந்தனர்

பிரிந்தனர்

திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷ் வெளியிட்ட அறிவிப்பில், 18 ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம்.

சோகத்தில் ரசிகர்கள்

சோகத்தில் ரசிகர்கள்

எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் இதே அறிவிப்பை வெளியிட்டு பிரிவை உறுதி செய்தார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பல வருடங்களாகவே பிரிந்து இருந்தனர்

பல வருடங்களாகவே பிரிந்து இருந்தனர்

இந்நிலையில், நட்சத்திர தம்பதிகளின் பிரிவு குறித்து அவர்களின் நெருங்கிய நண்பர் கவலையுடன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த சில மாதங்களாகவே பிரிந்துதான் வாழ்ந்து வந்ததாகவும், பிரிந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மனதில் சில காலமாக இருந்துள்ளது என்றார். பிரிவினை பற்றிய அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு தம்பதியினர் அமர்ந்து நீண்ட நேரம் பேசித்தான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

படத்தில் கவனம் செலுத்துவார்

படத்தில் கவனம் செலுத்துவார்

ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யாவுடன் உரசல் ஏற்படும் போதெல்லாம் தனுஷ் ஒரு புதிய படத்தில் கையெழுத்திடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தன் முழு கவனத்தையும், ஈடுபாட்டையும் படத்தில் செலுத்துவாராம்.

விரிசல் அதிகமானது

விரிசல் அதிகமானது

தனுஷ், எந்த ஒரு விஷயத்தையும் நெருங்கிய நண்பரிடம் பகிர்ந்து கொண்டது இல்லை. அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று சொல்லவே முடியாது. ஐஸ்வர்யாவுடனான டென்ஷனிலிருந்து விடுபட தனது வேலையில் அதிகப்படியான கவனத்தை செலுத்தினார். இதுவே இவர்கள் உறவில் அதிக விரிசலை ஏற்படுத்தியது என்றார்.

குழந்தைகளுக்காக

குழந்தைகளுக்காக

யாத்ரா மற்றும் லிங்காவின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு இருவரும் நல்ல முடிவை எடுத்துள்ளதாகவும், எந்தவித விரோதமோ, வெறுப்போ இல்லாமல், பொது இடங்களில் குழந்தைகளுக்காக ஒன்றாக இருப்பார்கள் என்றும் தம்பதியினரின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X