என்ன சொல்றீங்க...தனுஷ்– ஐஸ்வர்யா ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்களா ?
சென்னை : சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிரிவை அறிவித்த பிறகு ஐதராபாத்தில் பிஸியாக இருக்கும் ஒரே ஓட்டலில் தான் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர்கள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் மற்றும் மனைவி ஐஸ்வர்யா இருவரும், திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகும் நிலையில் தாங்கள் பிரிய முடிவு செய்திருப்பதாக ஜனவரி 17ம் தேதி தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர். இதனால் சோஷியல் மீடியா, மீடியா என அனைத்தும் பரபரப்பாகின. அவர்களின் முடிவு வேதனை அளிப்பதாக பலர் கருத்து தெரிவித்தனர். இருவரும் தங்களின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பிரபலங்களும், ரசிகர்களும் கேட்டுக் கொண்டனர்.

பாடல் ஷுட்டிங்கில் ஐஸ்வர்யா
பிரிவை அறிவித்த இருவருமே தற்போது சென்னையில் இல்லை. ஐதராபாத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஐஸ்வர்யா நீண்ட இடைவேளைக்கு பிறகு டைரக்ஷனில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது. காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட போகிறாராம் ஐஸ்வர்யா. இதற்கான ஷுட்டிங் ஜனவரி 25ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளதாம். இதற்காக முன்கூட்டியே தனது வேலைகளை கவனிக்க தான் ஐஸ்வர்யா ஐதராபாத் சென்றுள்ளாராம்.

ஷுட்டிங்கில் பிஸியான தனுஷ்
இதே போல் தனுஷும் மாறன், திருச்சிற்றலம்பலம், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார். இதற்கான ஷுட்டிங்கிற்காக அவரும் ஐதராபாத் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா - தனுஷ் இருவருமே தங்களின் வேலைகளில் செம பிஸியாக இருப்பதாக கூறப்பட்டது.

ஒரே ஓட்டலில் ஐஸ்வர்யா - தனுஷ்
இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவலாக, ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் பங்கேற்கும் வேலைகள் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தான் நடக்கிறதாம். இதனால் பிரபலங்கள் தங்குவதற்காக ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டலில் தான் இருவருமே தங்கி இருக்கிறார்களாம். ஆனால் வெளியில் வரும் போதோ, போகும் போதோ இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்களா, பேசிக் கொண்டார்களா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இவர்கள் மீண்டும் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நேருக்கு நேர் சந்திப்பு
சமீபத்தில் விவாகரத்தை அறிவித்த சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும், ஐதராபாதத்தில் ஒரே செட்டில் நடந்த தங்களின் ஷுட்டிங்கில் பங்கேற்றுள்ளனர். ஷுட்டிங் முடிந்ததும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்ட இருவரும் ஏதும் பேசாமல், தங்களின் கார்களில் ஏறி சென்று விட்டனர். ஆனால் தற்போது சமந்தா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இருந்து விவாகரத்து அறிவிப்பு பதிவை நீக்கி விட்டார். இதனால் சுமூகமாகி இருவரும் இணைய போகிறார்களா என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர்.
Recommended Video

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
அதே போல் ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஒரே இடத்தில் தங்கி இருப்பதால் சந்தித்து கொள்ள வாய்ப்பு ஏற்படலாம். அது அவர்கள் மீண்டும் இணைய வழிவகுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











