தனுஷ் பிறந்தநாளுக்கு ஃபேன்சுக்கு இப்படி ஒரு ட்ரீட்டா?...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்
சென்னை : தமிழ் சிவனிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான தனுஷ் 2 முறை தேசிய விருது பெற்றவர். இவர் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இருந்தாலும் தனுஷ் ரசிகர்கள் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில் தனுஷின் பிறந்தநாளை கொண்டாட துவங்கி விட்டனர். தனுஷின் தற்போதைய படங்கள் பற்றிய அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறது.
நேற்று நானே வருவேன், வாத்தி படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இதனால் இன்று வேறு என்ன வர போகிறது என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

திருச்சிற்றம்பலம் 3வது சிங்கிள்
தனுஷ் தற்போது நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இரண்டு சிங்கிள்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்று கிடைத்துள்ள நிலையில், மூன்றாவது சிங்கிளாக லைஃப் ஆஃப் பழம் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜுலை 30 தேதியும் ட்ரீட் இருக்கா
லேட்டஸ்ட் தகவலின் படி, தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, இன்று மட்டுமல்ல ஜுலை 30 தேதியும் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்க தனுஷ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜுலை 30 ம் தேதி மாலை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஜெபியர் இன்ஜினியரிங் காலேஜில் இந்த விழா நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

7 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி
இந்த விழாவில் தனுஷ் மற்றும் அனிருத்தின் லைவ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. அனிருத், தனுஷ் கூட்டணி 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ள படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த சமயத்தில் இவர்கள் இணைந்து இசை நிகழ்ச்சியையும் வழங்க போகிறார்கள் என்பது ரசிகர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி உள்ளது.

அறிவிப்பு வராதது ஏன்?
தனுஷின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது திருச்சிற்றம்பலம். அப்படி இருக்கையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பை இதுவரை படக்குழு வெளியிடாதது ஏன் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இன்னிக்கு வேறு என்ன இருக்கு
தனுஷின் டோலிவுட் என்ட்ரியான வாத்தி படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட உள்ளது. கேப்டன் மில்லர் டீமும் இன்று அப்டேட் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் அடுத்த படங்களின் அறிவிப்புக்களும் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











