யப்பா கேட்கும்போதே கலங்குதே.. ஏ.ஆர்.ரஹ்மான் பிச்சிட்டாரு.. தனுஷின் தேரே இஷ்க் மே முதல் பாடல் சூப்பர்

மும்பை: இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வெற்றியை ருசித்திருக்கும் தனுஷ் தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மே படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு கீர்த்தி சனோன் ஜோடி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நவம்பர் 28ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் ஓ காதலே என்ற முதல் பாடல் இன்று ரிலீஸாகி அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

தனுஷுக்கு கடந்த சில காலமாகவே ஹிட் படம் எதுவும் அமையாமல் இருந்தது. குபேரா, ராயன், கேப்டன் மில்லர் என வரிசையாக அவருக்கு சறுக்கல்தான். சகோதரி மகனை வைத்து இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் ஃப்ளாப் என்ற ரிசல்ட்டையே கொடுத்தது. இதன் காரணமாக அவரது கரியர் இனி அவ்வளவுதான் என்று அவருக்கு எதிர் தரப்பினர் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தார்கள்.

இட்லி கடையில் வெற்றி: இப்படிப்பட்ட நிலைமையில்தான் இட்லி கடை படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படத்தை அவரது சொந்த வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்கள், மனிதர்களை வைத்து உருவாக்கியிருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. பலரும் படத்தை பாராட்டி தள்ளிவிட்டார்கள். அவருக்குள் இப்படி ஒரு இயக்குநர் இருக்கிறாரா என்றும் ஆச்சரியப்பட்டார்கள். இட்லி கடை பெற்ற வெற்றி தனுஷுக்கு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Dhanush and Kriti Sanon s Tere Ishq Mein First Song O Kadhaley Becomes an Instant Hit
Photo Credit:

தேரே இஷ்க் மே: இதற்கிடையே தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் கலக்கிவரும் அவர்; ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மே என்ற படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். ஏற்கனவே தனுஷும், ஆனந்த்தும் இணைந்து ராஞ்சனா என்ற மெகா ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை மொழிகள் கடந்து கொண்டாடப்பட்டது. ரீ ரிலீஸிலும் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படத்துக்கும் எதிர்பார்ப்பு: அப்படிப்பட்ட கூட்டணி தேரே இஷ்க் மே படத்தில் மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட ஹைப் ஏறியிருக்கிறது. கண்டிப்பாக ராஞ்சனா ரிசல்ட்டைத்தான் இப்படமும் பெறும் என்பது ரசிகர்களின் அதீத நம்பிக்கையாக இருக்கிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நவம்பர் 28ஆம் தேதி பான் இந்தியா படமாக இப்படம் ரிலீஸாகிறது. இதுவும் வெற்றி பெற்று தனுஷின் பாலிவுட் மார்க்கெட்டை உயரத்துக்கு கொண்டு செல்லுமா என்பதை பார்க்கலாம்.

முதல் சிங்கிள் சூப்பர்: இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஓ காதலே என்ற பாடல் தமிழில் இன்று வெளியாகியிருக்கிறது. ஆதித்யா ஆர்கே இப்பாடலை மயக்கும் குரலில் பாடியிருக்கிறார். அக்மார்க் ரஹ்மான் ஸ்டைலில் உருவாகியிருக்கும் இப்பாடலை கேட்கும்போது காதலில் கலங்கடிக்க செய்வதாகவும், கண்டிப்பாக பாடல் சூப்பர் ஹிட்டடித்துவிடும் என்று ரசிகர்கள் அதனை ட்ரெண்டாக்கிவருகின்றன. லிரிக்கல் வீடியோவில் தனுஷின் நடிப்பு, தனுஷ் - கீர்த்தி சனோனின் கெமிஸ்ட்ரியும்கூட சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருப்பது கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X