அடுத்த மாசமே தனுஷ் இந்தி படம் ரிலீஸ்.. தமிழில் ட்வீட் போட்டு டீசரை வெளியிட்ட க்ரித்தி சனோன்!
சென்னை: இந்த ஆண்டு முழுவதுமே தனுஷ் ஆண்டாக மாறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான குபேரா படம் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகி 100 கோடி வசூலை ஈட்டியது.
ஆயுத பூஜை தினமான இன்று தனுஷின் இட்லி கடை படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதமே தனுஷின் இந்தி படமும் ரிலீஸ் ஆகப்போவதாக அறிவித்து டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் தமிழில் அழகாக படத்தின் கதை குறித்து ட்வீட் போட்டு டீசரை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தேரே இஷ்க் மே டீசர் ரிலீஸ்: தனுஷை வைத்து அம்பிகாபதி, கலாட்டா கல்யாணம் என இந்தியில் 2 படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள தேரே இஷ் மே படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகை க்ரித்தி சனோன் தமிழில் அந்த டீசரை ட்வீட் செய்து இங்கே உள்ள தனுஷ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். அம்பிகாபதி, கலாட்டா கல்யாணம் படங்களை போலவே இந்த படத்திலும் காதலர்களுக்கு இடையேயான பிரச்னையை மையப்படுத்தியே ஆனந்த் எல். ராய் படத்தை உருவாக்கியுள்ளார் என்பது டீசரை பார்த்தாலே தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
சங்கர் மற்றும் முக்தியின் காதல் கதை: "காதலில் வாழ்வோர் பலர் ஆனால்
அதில் கரைபவர் வெகு சிலரே சங்கர் மற்றும் முக்தியின் காதல் உலகிற்கு உங்களை வரவேற்கிறோம்" என பதிவிட்டு இந்த டீசரை க்ரித்தி சனோன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் டீசரில் அப்பாவின் இறுதி சடங்கிற்காக காசிக்கு போயிருந்தேன், புது அத்தியாயத்தை தொடங்கும் முன் பழைய பாவத்தை கழித்துவிட்டுப் போ என அவரது தலையில் கங்கா தீர்த்தம் ஊற்றும் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன. காதலை மறந்துவிட்டு வேறு ஒருவரை க்ரித்தி சனோன் திருமணம் செய்து கொள்ள முயல, தனுஷ் அங்கே வந்து என்ன செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏ.ஆர். ரஹ்மான் இசை வேறலெவலில் படத்துக்கு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாசம் இன்னொரு படம்: குபேரா படம் தமிழ்நாட்டில் சரியாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக ஓடியது. இட்லி கடை படத்துக்கு பெரியளவில் ஓபனிங் இல்லையென்றாலும் விடுமுறை நாட்களில் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த மாதமே தனுஷ் நடித்துள்ள இந்தி படமான தேரே இஷ்க் மே படம் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. வரும் நவம்பர் 28ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் தனுஷின் அடுத்த படம் வெளியாக உள்ளது.
தனுஷ் போல சொல்லிடாதீங்க: இட்லி வாங்க கூட காசு இல்லாமல் இருந்த தனுஷ் இன்று பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் இட்லி கடை படத்தை இயக்கியுள்ளார். அவர் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னது போல சொல்லாமல், அடுத்த மாசமும் டிக்கெட்டுக்கு காசு கொடுத்து தனுஷின் அடுத்த படத்தையும் பார்த்துவிடுங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படம் சிறப்பாக ஓடியது போல இந்த படமும் ஓடும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











