மாமன், தலைவன் தலைவி வரிசையில் மண் மணம் வீசும் இட்லி கடை.. ராஜ்கிரண் பாட்டு மனசை உலுக்கி எடுக்குதே!

சென்னை: ராஜ்கிரணை வைத்து முதன்முதலில் அப்பா கஸ்தூரி ராஜா எப்படி படம் எடுத்தாரோ அதே போல தனுஷும் தனது முதல் படமான ப. பாண்டி படத்தில் ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து எடுத்தார். ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களில் ராஜ்கிரண் நடிக்காத நிலையில், இட்லி கடை படத்தில் மீண்டும் சிவனேசன் எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் ராஜ்கிரண்.

"என் பாட்டன் சாமி வரும்" என தாத்தா ராஜ்கிரண் உடன் தனுஷ் இருக்கும் இட்லி கடை படத்தின் 3வது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை தாலாட்டி வருகிறது.

Dhanush and Rajkiran s Idly Kadai third single Yen Paattan Saami Varum song out now

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் இட்லி கடை படத்தில் உருவாகியுள்ள அத்தனை பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்ணின் மணத்தை கொண்ட படங்கள் எப்போதுமே தமிழ் சினிமாவில் வெற்றி பெறும் என்பதற்கு உதாரணமாக இட்லி கடையும் மாறும் என்கின்றனர்.

குடும்பஸ்தன், மாமன், தலைவன் தலைவி: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் நகரத்தை மையப்படுத்தி வெளியான படங்களை ஒப்பிடுகையில் ரசிகர்கள் மீண்டும் கிராமத்துப் படங்களை விரும்பி பார்க்கின்றனர் என்பது தெளிவாகி உள்ளது. பக்கத்து ஸ்டேட் ரசிகர்கள் எல்லாம் சூப்பர் ஹீரோ, ஃபேண்டஸி என ஓடிக்கொண்டிருக்க தமிழ்நாட்டு ரசிகர்கள் சொந்த கதையை எடுங்கப்பா பார்க்க நல்லா இருக்கு என ரசித்து பார்த்து ஹிட் அடிக்க வைத்து வருகின்றனர். மணிகண்டனின் குடும்பஸ்தன், சூரியின் மாமன் மற்றும் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு சிறப்பாக வசூல் வேட்டை நடத்திய நிலையில், அதே வரிசையில் தனுஷின் இட்லி கடை இடம்பெறும் என நம்புகின்றனர்.

ராஜ்கிரண் பாட்டு ரிலீஸ்: தனுஷ் மற்றும் ராஜ்கிரண் இருக்கும் இட்லி கடை படத்தின் "என் பாட்டன் சாமி வரும்" பாடல் அப்படியே மெய் சிலிர்க்கும் விதமாக ரசிகர்களை உலுக்கி எடுக்கும் விதமாக உள்ளது. மாடர்ன் சிட்டி கதைகள் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பெரிதாக வொர்க்கவுட் ஆகாத நிலையில், ரசிகர்களின் பல்ஸ் அறிந்து தன்னுடைய பால்ய கால கிராம வாழ்க்கைக்கு சென்று தனுஷ் உருவாக்கியுள்ள இட்லி கடை நிச்சயம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் தியேட்டருக்கு வரவைக்கும் என்கின்றனர். அந்தோணி தாசன் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமன் படத்திலும் ராஜ்கிரண் காட்சிகள் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் டைரக்‌ஷன்: ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண்விஜய், நித்யா மேனன் என பல திறமையான நடிகர்களை இந்த படத்தில் இயக்கி அவர்களுடன் இணைந்தும் தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் இந்த பாடலை உருவாக்கிய காட்சிகளும் லிரிக் வீடியோவில் தற்போது வெளியாகி இருக்கிறது. வரும் அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் தனுஷின் இந்த படமும் தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு இன்னொரு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர். காந்தாரா சாப்டர் 1 போட்டியாக வெளியானாலும் தமிழ்நாட்டில் இட்லி கடை அனைத்து மாவட்டங்களிலும் வசூல் வேட்டை நடத்துவது உறுதி என்கின்றனர். 2ம் பாதியில் பாக்ஸிங் கதை, சிட்டி லைஃப் என படம் செல்வதால் ஒட்டுமொத்த ஆடியன்ஸையும் கவரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X