»   »  தனுஷ் – சிவகார்த்திக்கேயன் பிரச்சினை: கலவரச் சட்டையாகும் காக்கிச் சட்டை?

தனுஷ் – சிவகார்த்திக்கேயன் பிரச்சினை: கலவரச் சட்டையாகும் காக்கிச் சட்டை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள காக்கிச் சட்டை திரைப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் படம் வெளியாகும் முன்னர் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் பற்றியும், ஹீரோ சிவகார்த்திக்கேயனைப் பற்றியும் வெளியாகும் செய்திகள்தான் ஊடகங்களில் கலவரத்தை ஏற்படுத்திவருகிறது.

இவருக்கும் அவருக்கும் சண்டையாமே... முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்கிறாராமே என்ற செய்திகள்தான் இப்போது அதிகம் வெளியாகிறது.

அந்த ஃபங்சன்ல இவரு வந்தப்ப அவரு விசுக்குன்னு போயிட்டாராமே என்று கூட போட்டு தாக்கினர். ஆனால் எங்களுக்குள்ள அப்படி எதுவுமே இல்லை நாங்க இப்பவும் நண்பேண்டாதான் என்று போகும் இடமெங்கும் சொல்லி வருகிறார் சிவகார்த்திக்கேயன்.

சூடுபிடித்த மார்க்கெட்

சூடுபிடித்த மார்க்கெட்

மெரீனாவில் ஹீரோவான சிவகார்த்திக்கேயன், தனுசின் 3 படத்தில் நண்பனாக நடித்தார். பின்னர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் சிவகார்த்திக்கேயனை ஹீரோவாக போட்டு எதிர்நீச்சல் படத்தை எடுத்தார். தொடர்ந்து சிவகார்த்திக்கேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சக்கை போடு போடவே சிவகார்த்திக்கேயனின் மார்க்கெட் உச்சத்திற்குப் போனது.

எதிர்பார்ப்பில் காக்கிச்சட்டை

எதிர்பார்ப்பில் காக்கிச்சட்டை

வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ள காக்கி சட்டை படம் தமிழகத்தில் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதான் சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிகளவு தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ம லெவலே வேற

நம்ம லெவலே வேற

இந்த படம் வெற்றி பெற்றால் சிவகார்த்திகேயனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

வெளிநாடுகளில்

வெளிநாடுகளில்

கமல், ரஜினி, அஜீத், விஜய், சூர்யா போன்ற பெரிய ஸ்டார்களுக்கு மட்டும்தான் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் மார்க்கெட் இருந்தது. தற்போது முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கும் காக்கிச்சட்டை படம் மூலம் வெளிநாட்டு மார்க்கெட் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

ஐரோப்பா நாடுகளில்

ஐரோப்பா நாடுகளில்

பிரான்ஸ் நாட்டில் 20 தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஐரோப்பாவில் உள்ள ஒருசில நாடுகளிலும் காக்கி சட்டை படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்முறையாக பெரிய ஹீரோ அல்லாத ஒரு படம் வெளிநாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்ற பெருமையை காக்கி சட்டை அடைந்துள்ளது.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

இப்படி பட ரிலீஸ் வேலைகள் ஒருபுறம் சுமூகமாக போய்க்கொண்டிருக்க படத்திற்கான புரமோசன் வேலைகளில் சிவகார்த்திக்கேயன் பிஸியாக இருக்கிறார். படத்தில சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போல சில சீன்கள் வைக்க இயக்குநரை சிவகார்த்திக்கேயன் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மறுத்த துரை செந்தில்குமார்

மறுத்த துரை செந்தில்குமார்

ஆனால் இயக்குநர் துரை செந்தில்குமார் இதற்கு மறுத்துவிட்டதாகவும், தயாரிப்பாளர் தனுசிடம் புகார் கூறியதால்தான் சிவகார்த்திக்கேயன் மீது கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்படியா? சண்டையா?

அப்படியா? சண்டையா?

இந்த சண்டை, கோபம் உண்மையா என்று சன்டிவியின் சிறப்பு நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொன்ன சிவகார்த்திக்கேயன், ஆமா எங்களுக்குள்ள சண்டைதான். என்னை வச்சு அடுத்த படம் எடுக்கப் போகிறார் தனுஷ். இரண்டு பேரும் அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம் அந்த அளவிற்கு சண்டை என்றும் கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஏய் உங்களுக்குள்ள என்னப்பா நடக்குது?

English summary
“Kakki Sattai” is planned to be released on 27th of February 2015. Sources say that during the shot of “Kakki Sattai” Sivakarthikeyan had been pressurising the director of the film Durai Senthilkumar to make scenes that resembled like Superstar Rajnikanth. Durai Senthilkumar had objected many number of times and had complained about it to Dhanush the producer of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil